Kallakurichi: தொடரும் உயிரிழப்புகள்; கண்ணீரில் கள்ளக்குறிச்சி - என்ன நடக்கிறது? Twitter
தமிழ்நாடு

Kallakurichi: தொடரும் உயிரிழப்புகள்; கண்ணீரில் கள்ளக்குறிச்சி - என்ன நடக்கிறது?

Priyadharshini R

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம்‌ காலனி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டதையடுத்து பலர் அதனை குடித்துள்ளனர். இதனால் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

விஷ சாராயம் குடித்தது பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், விழுப்புரம் சேலம் ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுவரை கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய விவகாரத்தை கவனிக்க தவறிய ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.

அதே போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?