Kamal Hassan

 

Twitter

தமிழ்நாடு

வெள்ளி கொலுசு. அண்டா, ஹாட்பாக்ஸ், 2000 ரூபாய் என விலை பேசப்பட்ட வாக்காளர்கள் - கமல் வேதனை

Antony Ajay R

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. ஆளும் கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து பெருவாரியான வார்டுகளைக் கைப்பற்றின. பொதுவாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி செல்வாக்கைக் காட்டிலும் தனிநபர் செல்வாக்கின் அடிப்படையில் அதிகமாக வாக்குகள் செலுத்தப்படுவதால் சிறிய, பெரிய, மாநில, தேசிய என எல்லா கட்சிகளுக்கும் ஓரளவு வெற்றி வாய்ப்பு இருக்கும். ஆனால் நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் அப்படி அமையவில்லை.


பெரிய கட்சியான அதிமுக, பாஜக கட்சிகளே மிகச் சொற்பமான இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளன. சிறிய கட்சிகளின் நிலை இன்னும் மோசம். குறிப்பாக மக்கள் நீதி மையம் கட்சி ஒரு வார்டு கூட வெற்றியடையவில்லை.

இதனைத்தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

“உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பணபலம், கூட்டணி பலத்தை எதிர்த்துப் போட்டியிடத் துணிந்த ம .நீ .ம வேட்பாளர்தான் வெற்றியாளர்கள் இடைக்கால வெற்றி, தோல்விகள் மக்கள் பணியை என்றுமேபாதித்ததில்லை” என அந்த அறிக்கை தொடங்கியது


மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் உங்கள் வார்டுகளில் நீங்களே வென்றதாக மக்கள் சேவையைத் தொடருங்கள். வெள்ளி கொலுசு. அண்டா, ஹாட்பாக்ஸ், 2000 ரூபாய், 8000 ரூபாய் என வாக்காளர்கள் விலைபேசப்பட்ட போதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மையாக வாக்களித்தவர்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க நிதி இல்லாமல் உங்களிடம் கோரிக்கை வைத்தபோது தங்களால் இயன்றதை அனுப்பியவர்களுக்கு நன்றி. நாம் கண்டிருக்கும் தோல்வி திருத்திக்கொண்டு முன்னேரி செல்லக்கூடியது.

பல இடங்களில் மொத்த மக்களில் பாதிப்பேருக்கும் குறைவாகவே வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையான மக்கள் தமிழகத்தில் நடக்கும் ஆபாச அரசியலை விரும்பவில்லை என்பதையே இதுக் காட்டுகிறது.

மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம் என்பது சம்பிரதாய வார்த்தை அதைச் சொல்ல விரும்பவில்லை. சில நேரங்களில் மக்களும் ஒன்றாகத் தவறிழைக்கின்றனர்” என வேதனையுடன் கூறியிருந்தார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?