Tasmac

 

Twitter

தமிழ்நாடு

Tasmac : தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு - மது பிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Newsensetn

தமிழகத்தில் டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்கிறது.மற்றும் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாயிருக்கிறது.

இந்த விலையுயர்வின் மூலம் ஆண்டுக்கு 4396 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வரவு என்றும் கூடுதலாக தகவல் வெளியாயிருக்கிறது.பீர் வகை மதுபானத்தின் விலை உயர்வு மூலம் மட்டும் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.1.76 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்பு உள்ளது.

சென்னையில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மது விலக்கு ஆயத்தீர்வை துறையில் வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மது பானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

பீர் வகை மதுபானங்களின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. குவாட்டர் ஒன்றிற்கு சாதாரண ரகங்கள் ரூ. 10-ம் மீடியம், உயர் ரகங்கள் ரூ.20-ம் விலை உயர்ந்துள்ளது. ஆப் பாட்டில் சாதாரண ரகங்கள் ரூ. 20-ம், மீடியம், உயர் ரகங்களுக்கு ரூ.40-ம் விலை உயர்ந்துள்ளது. புல் பாட்டில் சாதாரண ரக மதுபானங்களுக்கு ரூ. 40-ம், மீடியம் மற்றும் உயர் ரகங்களுக்கு ரூ. 80-ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?