உதயநிதி ஸ்டாலின்  Twitter
தமிழ்நாடு

”மாமன்னன் தான் என் கடைசி படம்” - சினிமாவிலிருந்து விலகும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Priyadharshini R

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தமிழக அமைச்சராக பதவி ஏற்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது.

அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

”தன் மீது வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் செயலால் பதிலளிப்பேன், தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்” என்றார் உதயநிதி.

தொடர்ந்து பேசிய அவர் கமல் படத்திலிருந்து தான் விலகி விட்டதாகவும், மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் தான் என் கடைசி படம் என அறிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?