டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் டிவிட்டர்
தமிழ்நாடு

Morning News Today: ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை

Keerthanaa R

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இந்தியா வந்தடைந்தார். அவருக்கு இந்தியா தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபஹர் துறைமுகம், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை உள்ளிட்டவை இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்துல்லாஹியன் கடந்த ஆண்டு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, இது அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம். முகமது நபிக்கு எதிரான பாஜக செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்குப் பிறகு, இந்தியாவுக்கு வருகை தரும் அரபு நாட்டுப் பிரதிநிதி ஒருவரின் முதல் பயணமும் இதுதான்.

சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வாசலில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலையம் அருகே, ஏராளமான செவிலியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் (எம்.ஆர்.பி) தேர்ச்சி பெற்று கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து பெரும்பாலான நர்சுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று காலை போராட்டம் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து செவிலியர்கள் வந்து கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு, சாலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறைக்கும் செவிலியர்களுக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்துக் கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களின் கோரிக்கையின்படி, பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

செவிலியர்கள் போராட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

இன்று காலை 11.10 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடக்கிறது.

பிரதமர் மோடி

பா.ஜ.க -வின் தேசிய செயற்குழு கூட்டம் அறிவிப்பு

ஜூலை மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் பா.ஜ.க.-வின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு பா.ஜ.க -வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை வகிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க.-வின் முதல்வர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 2024 பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?