Suicide Twitter
தமிழ்நாடு

நாமக்கல்: தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவர் - காரணம் என்ன?

வீட்டின் அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார் அந்த மாணவர். அவரது அப்பா - அம்மா இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் அந்த மாணவர் மன அழுத்தத்திலிருந்துள்ளார். இதுவே அவரது தற்கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Antony Ajay R

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அருகே சிங்ளாந்தபுரத்தில் வசிப்பவர் ரவி இவரது மனைவி மேகலா இந்த தம்பதியினரின் 12ம் வகுப்பு படிக்கும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார் அந்த மாணவர். அவரது அப்பா - அம்மா இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் அந்த மாணவர் மன அழுத்தத்திலிருந்துள்ளார். இதுவே அவரது தற்கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

குறிப்பு

12ம் வகுப்புத் தேர்வுகள் நடந்து வரும் சூழலில் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்கொலைக்கான குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார். அந்த குறிப்பில் என் சாவுக்குப் பிறகாவது அப்பா அம்மா ஒன்னா இருங்க என எழுதியிருக்கிறார். மேலும் அம்மா மற்றும் அக்காவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும், `நான் எங்கும் செல்லவில்லை. வீட்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன்’ என எழுதியிருந்திருக்கிறார்.

காலையில் அவரது குடும்பத்தினர் மாணவரின் சடலத்தைத் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் மாணவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?