கொரோனா Twitter
தமிழ்நாடு

Morning News Today: தமிழகத்தில் புதிய வகை கொரோனா - அமைச்சர் மா.சுப்ரமணியன்

NewsSense Editorial Team

தமிழகத்தில் புதிய வகை கொரோனா

தமிழகத்தில் ஒமைக்ரான் பிஏ4 கொரோனா வகை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். "உலகெங்கும் கொரோனா தொடர்பாக 7 வகை வைரஸ் உருவானது. அதில் பிஏ 4 என்ற புதிய வகை கொரோனா தொற்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டு, தொற்றும் அவருக்குக் குணமாகிவிட்டது. அவருடன் தொடர்பிலிருந்த யாருக்கும் தொற்று பரவவில்லை. சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிஏ 4 கொரோனா வைரஸ் ஆப்ரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்டது. அந்த வகைதான் தமிழகத்திலும் பரவியிருக்கிறது." எனத் அமைச்சர் தெரிவித்தார்.

ஊட்டியைக் கண்டறிந்த ஜான் சல்லிவன் சிலையைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

இன்று நாம் காணும் ஊட்டியை உருவாக்கியவர் ஊட்டியின் முதல் கலெக்டராகப் பதவியேற்ற ஜான் சல்லிவன். இவர் கலெக்டராகப் பொறுப்பேற்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார். ஊட்டியின் 200-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜான் சல்லிவனுக்கு சிலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், ஜான் சல்லிவனின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையினை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ஜோ பைடன் ஆசியச் சுற்றுப்பயணம்

பைடன்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிற குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வருகிற 24-ம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் செல்லவிருக்கிறார். இன்று தென் கொரியா செல்லும் பைடன், தென் கொரிய அதிபர், ஜப்பான் பிரதமரைச் சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுதான்.

கான் திரைப்படவிழாவில் அரை நிர்வாணமாகப் போராடிய பெண்

பெண்

பிரான்ஸ் நாட்டில் கான் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் அங்குக் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், பெண் ஒருவர் அரை நிர்வாணமாகச் சிவப்பு கம்பளத்தில் ஓடினார். எங்கள் மீதான பாலியல் அத்துமீறலை நிறுத்துங்கள்! என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசி அரை நிர்வாணமாக நின்றார். அந்த பெண் உக்ரேனியக் கொடியைத் தனது உடலில் வரைந்து, அதில் எங்களைக் கற்பழிப்பதை நிறுத்து! என எழுதியிருந்தார். உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்தபோது பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குகள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கான் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

RR

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?