ஊட்டி: கேர்ன் ஹில் முதல் முத்தநாடு மந்து வரை: பயணிகள் பார்க்கத்தவரும் பூலோக சொர்க்கம்! Ooty / Canva
தமிழ்நாடு

ஊட்டி: கேர்ன் ஹில் முதல் முத்தநாடு மந்து வரை: பயணிகள் பார்க்கத்தவறும் பூலோக சொர்க்கம்!

Antony Ajay R

தமிழகத்தின் எந்த முனையில் இருந்தாலும் சுற்றுலா என வாயெடுத்தாலே நம் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான்.

இந்த மலைகளின் அழகை வியக்காதவர் குறைவு. எல்லாருமே ஒரு முறையேனும் இங்கு சென்று இளைப்பாரி வந்திருப்போம். சிலருக்கெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை ஊட்டி செல்லும் பழக்கம் இருந்திருக்கும்.

எத்தனை பேர் எத்தனை முறை சென்றாலும் இன்றும் பலரும் அறியாத சில அற்புத தலங்கள் ஊட்டியில் இருக்கின்றன. மலைகளின் அரசி மறைத்து வைத்திருக்கும் அந்த அதிசயங்கள் குறித்துப் பார்க்கலாம்.

காட்டேரி பூங்கா

மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்குள் நுழையும் யாவரும் இந்த காட்டேரி பூங்காவைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் ஏனோ நம் கண்களில் இதுமட்டும் படுவதில்லை.

சீசன் நேரத்திலும் கூட இந்த பூங்காவில் அதிக கூட்டம் இருக்காது. எனவே மன அமைதியுடன் இருக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் இது.

நீலகிரி தோட்டக்கலைத்துறையினர் பல ரகங்களில் சுமார் ஒரு லட்சம் மலர் செடிகளை நடவுசெய்து இங்கு பராமரித்து வருகின்றனர். இந்த பூங்காவை உருவாக்க மிகப் பெரிய புல்வெளியை பூங்காடாக மாற்றியுள்ளனர்.

5 ஏக்கர் பரப்பளவில் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காட்டேரி பூங்கா, அமைதிப்பூங்கா என்றே அழைக்கப்படுகிறது.

இந்த பள்ளத்தில் ஸ்பத்தோடியா, ஜெகரண்டா போன்ற பூ மரங்கள் இருக்கின்றன. பூங்காவின் சற்று அருகில் பெரும்பாறைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து ஓடும் குன்னூர் ஆற்றின் ஓசை ரீங்காரமாய் காதுகளில் பாயும்.

கேர்ன் ஹில் ஃபாரஸ்ட்

இந்த வனப்பகுதியில் தோடர்களின் பாரம்பரிய குடியிருப்பைப் போன்ற வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த வன விளக்க மையம் இருக்கிறது. இதில் நீலகிரியில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள், நவீன நீலகிரி உருவான வரலாறு போன்ற தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இறந்த சிறுத்தை, மான், மலபார் அணில், நீலகிரி வரையாடு போன்றவற்றின் உடல்களையும் பதப்படுத்தி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

கோபுரங்கள் போல எழுந்து நிற்கும் மரங்களுக்கு நடுவே நடைப்பயணமாகச் சென்று வனத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள காட்சி கோபுரத்தில் இருந்து இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மரங்களுக்கு நடுவே உயரமான தொங்கும் பாலம் ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள். ஹேங்கிங் ப்ரிஜ் எனப்படும் ஊசலாடும் அந்த தொங்கு பாலத்தில் நடந்தபடி காட்டை ரசிப்பது நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

ஊட்டி மெயின் பஸ் ஸ்டாண்டில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3- வது கி.மீ இருக்கிறது கேர்ன் ஹில் வனப்பகுதி.

கேர்ன் ஹில் ஃபாரஸ்ட்

மரவியல் பூங்கா

இந்த மரவியல் பூங்கா 1.5 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.சிறிய பூங்காவாக இருந்தாலும் இதில் பல அதிசயங்களை நாம் கண்டடைய முடியும்.

குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய சுமார் 60 வகையான மரங்களை இந்தப் பூங்காவில் பராமரித்து வருகின்றனர். அவற்றில் மிக மிக அரியவகை மரங்களான டைனோசர் காலத்து 'ஜிங்கோ பைலபா' மரம், கிரிக்கெட் பேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் வில்லோ மரங்கள், கனடா நாட்டின் மேப்பில் மரங்கள் என பல்வேறு வகையான மரங்கள் இருக்கின்றன.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் 1982-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் இந்த மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது.

ஊட்டி மத்திய பேருந்து நி்லையத்தில் இருந்து முத்தோரை பாலாடா செல்லும் வழியில் 10 நிமிட நடைபயணத்தில் சென்றடையலாம். ஆனால் இன்றும் பலரும் சென்று பார்க்காத தலமாகவே இது விளங்குகிறது.

மரவியல் பூங்கா

முத்தநாடு மந்து

நீலகிரியில் இருக்கும் தோடர் பழங்குடி மக்கள் கூறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பழங்குடி மக்கள் குறித்து நாம் அதிக விஷயங்களை அறிந்திருப்பதில்லை.

நீலகிரியில் 6 வகையான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் தோடர் பழங்குடி மக்கள் அப்பர் நீலகிரீஸ் எனப்படும் நீலகிரியின் உச்சியில் வாழ்கின்றனர்.

தோடர் மக்கள், தங்களுக்கே உரித்தான தனித்துவமிக்க இசை, நடனம், உடை, உணவு போன்றவற்றை பாரம்பரியம் மாறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்‌. 

தோடர் மக்களின் வாழ்வுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளது அவர்களின் எருமைகள். தோடர் வளர்ப்பு எருமைகளுக்கு தனிச் சிறப்பு உள்ளது.

வாழ்வாதாரமான எருமைகளுக்கு அவர்களின் சடங்குகள் அனைத்திலும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படுகிறது.

ஆடைகளில் பூ வேலைப்பாடுகள் செய்வதில் கை தேர்ந்த தோடரின பெண்கள் தயாரிக்கும் 'பூத்துக்குளி' எனும் தோடர் எம்பிராய்டரி சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
தோடர் பழங்குடி மக்கள் பற்றி அறிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுபவர்கள் நிச்சயம் சென்றுவர வேண்டிய இடம் முத்தநாடு மந்து. தோடர் மக்களின் மிகப் பழமையான வழிபாட்டுத் தளங்கள் இங்கு இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?