Thanjavur: கலாச்சார தலைநகராக இருக்கும் தஞ்சாவூரில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன? Twitter
தமிழ்நாடு

Thanjavur: கலாச்சார தலைநகராக இருக்கும் தஞ்சாவூரில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

தஞ்சாவூரின் கலாச்சாரம், இசை மற்றும் கலை உலகம் முழுவதும் புகழ்பெற்றது. இந்த நகரம் கைத்தறி பட்டு, பருத்தி புடவைகள், ஓவியங்கள், வெண்கலம், பித்தளை சிலைகள் வாங்க சிறந்த இடமாகும்.

Priyadharshini R

தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரம் என்றால் நம் நினைவிற்கு வருவது தஞ்சாவூர். இது வரலாற்றுக்கு பெயர் பெற்ற கோயில்கள், கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களுக்கு பிரபலமானது.

தஞ்சாவூர் நெல் சாகுபடிக்கு ஒரு முக்கியமான இடமாக உள்ளது. எனவே இது 'தமிழ்நாட்டின் அரிசி கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது.

தஞ்சை 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சோழர்களின் தலைநகராக விளங்கியது. இந்த காலகட்டத்தில், சோழர்கள் பல கோவில்களை கட்டினர். குறிப்பாக இவர்கள் கட்டிய பிரகதீஸ்வரர் கோவில் சோழர்களின் செல்வச் செழிப்புக்கும், வலிமைக்கும் சான்றாக விளங்குகிறது.

தஞ்சாவூர் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் விஜயநகர கோட்டை ஆகியவை நகரத்தின் வரலாற்றை கூறுபவையாக உள்ளன.

தஞ்சாவூரின் கலாச்சாரம், இசை மற்றும் கலை உலகம் முழுவதும் புகழ்பெற்றது. நகரத்திலிருந்து சுமார் 54 கிமீ தொலைவில் உள்ள திருவையாறு, பழம்பெரும் இசைக்கலைஞர், கர்நாடக இசையமைப்பாளரான ஸ்ரீ தியாகராஜரின் பிறப்பிடமாகும். தஞ்சாவூர் கலைப் பள்ளி 1600 இல் உருவானது.

இந்த நகரம் கைத்தறி பட்டு, பருத்தி புடவைகள், ஓவியங்கள், வெண்கலம், பித்தளை சிலைகள் வாங்க சிறந்த இடமாகும்.

13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் கீழ் இருந்த தஞ்சாவூர், பின்னர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாயக்கர்களிடமிருந்து மராட்டியர்கள் நகரைக் கைப்பற்றினர்.

பல நூற்றாண்டுகளாக, தஞ்சையை பலர் ஆட்சி செய்தாலும் சோழர்கள் தான் நகரத்திற்கு பெருமை சேர்த்தனர் என்றே சொல்லாம்.

நிச்சயம் தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்கள்

  • பிரகதீஸ்வரர் கோவில்

  • கங்கைகொண்ட சோழபுரம்

  • சிவ கங்கை தோட்டம்

  • விஜயநகர் கோட்டை

  • சந்திர பகவான் கோவில்

  • ஸ்வார்ட்ஸ் சர்ச்

  • சுவாமி மலை கோவில்

  • சரஸ்வதி மஹால் நூலகம்

  • ஆலங்குடி குரு கோவில்

  • தஞ்சாவூர் அரச மாளிகை

  • கண்டியூர்

தஞ்சாவூரில் சாப்பிட சிறந்த இடங்கள்

தஞ்சாவூரில் இந்திய, சீன மற்றும் கான்டினென்டல் உணவு வகைகளை வழங்கும் பல உணவகங்கள் உள்ளன.

நகரத்தில் உள்ள உள்ளூர் உணவுக் கடைகளில் கிடைக்கும் உள்ளூர் தென்னிந்திய உணவுகளை முயற்சிக்கவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?