விஜய், ரங்கசாமி

 

Twitter

தமிழ்நாடு

நடிகர் விஜய் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு - பின்னணி என்ன?

Antony Ajay R

புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி பாஜக கூட்டணியுடன் வெற்றி பெற்று பதவியில் இருப்பவர். நேற்று இவர் முன்னணி தமிழ் நடிகரான விஜய்யுடன் சந்தித்துப் பேசியிருக்கிறார்.


நேற்று மாலையில் பனையூரில் உள்ள விஜய் வீட்டில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை இவர்களது சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ரங்கசாமி தரப்பில் கூறப்படுகிறது. ஒரு மணி நேர உரையாடல் வெறும் மரியாதை நிமித்தமானதாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கு “நல்ல நண்பர்களின் சந்திப்பில் நீண்ட நேர உரையாடல் சகஜம் தான் எனப் பதிலளித்திருக்கிறார்” ரங்கசாமி.

ரங்கசாமி

ஆனால் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமல்ல என சிலர் கூறுகின்றனர். இந்த சந்திப்பு உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமானதாக இருக்கக்கூடும் என்ற தகவல்களும் வருகின்றன.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பாஜக கூட்டணியுடன் ஆட்சியைப் பிடித்திருந்தாலும், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அவ்வளவு வலுவானதாக இல்லை. இதுவரை ஒரு முறை கூட பிரதமர் மோடி, ரங்கசாமியை சந்திக்கவில்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது வாரியத்தலைவர் பதவி தர முதல்வர் ரங்கசாமியிடம் கோரினர். தற்போது நஷ்டத்தில் இருப்பதால் வாரியத்தலைவர் பதவியைத் தர ரங்கசாமி மறுத்துவிட்டதால் இருதரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கான நிதியுதவியும் கடந்த ஆண்டை போலவே இம்முறை மத்திய பாஜக அரசு உயர்த்தி தராததும் ரங்கசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கூட்டணி முறிவு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள இரு கட்சிகளும் தயாராக இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

ரசிகர்களுடன் விஜய்

தற்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. இதற்கு தனது புகைப்படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என விஜய் அனுமதி அளித்துள்ளார். தற்போது புதுச்சேரியிலும் உள்ளாட்சித்தேர்தல் வர வாய்ப்புள்ளது. அத்துடன் பாஜகவுடன் மோதல் போக்கு இருப்பதால் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தன் தரப்பை வலுப்படுத்தலாம் என்ற ரங்கசாமியின் கணக்கே இந்த பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாகக் கருதப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?