ரகுல் காந்தியுடன் ஸ்டாலின்

 

Twitter

தமிழ்நாடு

'உங்களில் ஒருவன்' - முதல்வர் ஸ்டாலினின் சுயசரிததை புத்தகத்தை வெளியிடுகிறார் ராகுல் காந்தி

தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறப்பு முதல் 23 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை சுய சரிதை புத்தகமாக எழுதி வெளியிடுகிறார்

Antony Ajay R

நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பங்கேற்று புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த புத்தகத்தில், முதல்வரின் பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டுகால நினைவுகளை தொகுத்து முதல்வர் கைப்பட எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

'பூம்புகார் பதிப்பகம்' இந்தப் புத்தகத்தை வெளியிடவிருக்கிறது. சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு உங்களில் ஒருவன் புத்தக வெளியிட்டு விழா நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குகிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசுகிறார்.

இளைஞராக ஸ்டாலின்


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். விழாவின் நிறைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்ற உள்ளார்.

மார்ச் 1 1952-ல் பிறந்த மு.க.ஸ்டாலின் 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை தொடங்கி அரசியலில் நுழைகிறார். 23 வயது இளைஞரக இருந்த காலத்திலேயே மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் பிறப்பு முதல் மிசா காலகட்டம் வரை பேசுகிறது 'உங்களில் ஒருவன்'.

ஏற்கெனவே புத்தக கண்காட்சி மோடில் இருக்கும் சென்னை வாசிகள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் முதல்வரின் புத்தக வெளியீடு குறித்தும் ஆவலாக உள்ளனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?