சவுக்கு சங்கர் News Sense
தமிழ்நாடு

"நீதித்துறை ஊழலில் சிக்கியுள்ளது" சர்ச்சை கருத்தால் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை!

Keerthanaa R

.யூடியூப் சேனல்களில் நீதித் துறை குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதி மன்ற மதுரை கிளை  சங்கருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை என்று தீர்ப்பளித்துள்ளது.

"நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது" என யூடியூப்  சேனல்களில் பேசியிருந்தார் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர். திமுக, பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சியும் இவரது விமர்சனங்களிலிருந்தும், குற்றச்சாட்டுகளிலிருந்தும் தப்பியதில்லை. இதனால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் சவுக்கு.

Savukku Shankar

இந்த நிலையில் நீதித்துறை ஊழலில் சிக்கியுள்ளது என இவர் பேசிய வீடியோ அதிர்வலைகளை கிளப்ப, இவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை தாமாக முன்வந்து தொடுத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது நீதிமன்றம். மேலும் இதன் விளக்கத்தை அவரே நேரில் வந்து அளிக்கவேண்டும் எனவும் நீதிமன்றம்  கூறியிருந்தது.

சவுக்கு சங்கர்

வழக்கை விசாரித்த  நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், பி புகழேந்தி சிறப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பில், சவுக்கு சங்கர் நீதித்துறையை அவமதித்ததால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?