RN Ravi: "அம்மா என்றழைக்காத உயிரில்லையே"அன்னையர் தின விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி உருக்கம்! twitter
தமிழ்நாடு

RN Ravi: "அம்மா என்றழைக்காத உயிரில்லையே"அன்னையர் தின விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி உருக்கம்!

அப்போது விழாவில் பேசிய ஆளுநர், "விழாவின் தொடக்கத்தில் இசைஞானி இளையராஜா மிக அழகாக இசையமைத்த பாடல், பாடகர் யேசுதாஸின் குரலில் வெளியான 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

Keerthanaa R

அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைப்பெற்ற விழாவில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடலை பாடி மனமுருக பேசியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது தாய்மார்களுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர்

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று நடைப்பெற்ற அன்னையர் தின விழாவில் பேசியிருந்தார் ஆளுநர் ஆர் என் ரவி.

அப்போது விழாவில் பேசிய ஆளுநர், "விழாவின் தொடக்கத்தில் இசைஞானி இளையராஜா மிக அழகாக இசையமைத்த பாடல், பாடகர் யேசுதாஸின் குரலில் வெளியான 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

இந்த உலகில் அம்மாவின் ஆசியில்லாத யாரும் இருக்க முடியாது. தாயின் ஆசியில்லாமல் நீங்கள் எந்த ஒரு உயரத்தையும் அடைய முடியாது" என்றார்

மனிதனுக்கு அன்பு என்ற குணம் அம்மாவிடம் இருந்து தான் வருகிறது என்று கூறிய ஆளுநர், தற்போதைய குழந்தைகள் பெற்றோரை விட்டுவிட்டு வெளியூர்களுக்கு சென்றுவிடுகின்றனர்.

அது அம்மாக்களுக்கு மகிழ்ச்சியை தான் தரும் என்றாலும், நாம் ஒரு போதும் நம் தாயை கைவிட்டுவிடக் கூடாது எனப் பேசியிருந்தார்.

ஆளுநரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?