சீமான்

 

Twitter

தமிழ்நாடு

சீமான் கலகல நேர்காணல் : வடிவேலு திரும்ப நடிக்க வரணும்னு முயற்சிகள் எடுத்தேன்

N Buhari Raja

உள்ளாட்சித் தேர்தல் நிறைவுற்று அனைத்து கட்சிகளும் ஆசுவாசமாகியிருக்கும் தருணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்துப் பேசினோம். ஈழம் முதல் இன்னாள் தமிழ்நாடு வரை சீமானின் அரசியல் பாதை குறித்த காரசாரமான நேர்காணலின் பகுதிகள் இதோ...

தேர்தல் நேரத்தில் மட்டுமே சீமான் பாஜகவுக்கு எதிராகவும்,மற்ற நேரங்களில் பாஜக சார்பு நிலையும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துகொண்டே இருக்கிறதே...?

தேர்தல் நேரம் மட்டுமல்ல எல்லா காலங்களிலுமே நான் விமர்சிச்சுக்கிட்டுதான் இருக்கிறேன்.இதெல்லாம் வெறும் அவதூறு தான். கொள்கை அடிப்படையில் காங்கிரஸ் கட்சியையும் பிஜேபியையும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே தான் இருக்கிறேன்.காங்கிரஸ் கட்சியை மனித இனத்தின் எதிரியாகவும் பிஜேபி மனித குலத்தின் எதிரியாகவும் பார்க்கிறேன். ஆரிய சித்தாத்தங்களுக்கு எதிரா எப்போவும் நாம் தமிழர் கட்சி இருக்கத்தான் செய்யும். சி ஏ ஏ, பண மதிப்பு இழப்பு இதுக்கெல்லாம் என்னய தவிர அதிகமா குரல் கொடுத்த தலைவர நீங்க சொல்லவே முடியாது.இவுங்களா சொல்லிக்க வேண்டியது தான் சீமான் பி டீம், பிஜேபிக்காக வேலை பார்க்கிறார்னு,இன்னும் சொல்லப்போனா இதெல்லாம் பண்றது திமுக தான்


திமுகவுக்கு தான் நாம் தமிழரை கண்டு பயம். எங்கே கிறிஸ்தவ இஸ்லாமியர் வாக்குகளான 15% வாக்குகள சீமான் கொண்டு போயிருவேனோங்கிற பயத்துல இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க. அதிமுக கூட சேர்ந்து பிஜேபி ஓட்டு கேட்டப்போ அதிமுகவுக்கு ஓட்டு போடாத பிஜேபி வந்துரும்னு சொல்றதுல நியாயம் இருக்கு. சீமானுக்கு ஓட்டு போடாதா பிஜேபி வந்துரும்னு சொல்றது எந்த விதத்துல ஏத்துக்கிற மாதிரி இருக்கும்னு தெரியல.சீமான் வாக்கு பிரிக்கிறார்னு சொன்னா ,ஒன்னு நீங்க பலகீனமா இருக்கீங்க இல்லைன்னா உங்கள விட நான் வலிமையா இருக்கேன்னு தானே அர்த்தம். சீமான் மேல உள்ள பயம் தான் அவுங்கள எல்லாம் அப்படி பேச வைக்குது

ஜெயலலிதா, கருணாநிதி

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்னு அதிமுகவுக்கு ஆதரவா தானே இருந்தீங்க?

நீங்க அதையே சொல்லிட்டு இருக்க கூடாது. நான் அப்படி சொன்னத பத்தி பேசுனதுக்கு அண்ணன் மைத்ரேயன் வெளியிட்டு இருந்தாரு. ஒரு திமுக காரன் மாதிரியே அந்த விஷயத்த அணுகக்கூடாது. அவ்வளவு மக்கள போர்ல கொன்று குவிச்சதுக்கு உடந்தையா இருந்த திமுக பத்தி பேசலாமா? எப்பவும் பாதிக்கப்பட்டவனுக்கு பக்கத்துல ஆறுதலா இருக்கணும். என் அப்பனும் ஆத்தாவும் செத்துக்கெடந்தப்ப தோளில் கை போட்டு ஆதரவா நின்னது அந்த அம்மா , அதுவரை அந்த அம்மா கிட்ட இருந்த நிலைப்பாட்ட மாத்த வச்சோம் நாங்க. நான் அதிகாரத்துக்கு வந்தால் பங்களாதேஷுக்கு எப்படி இந்திய ராணுவம் அனுப்பி பிரிச்சுச்சோ அதுமாதிரி இலங்கைக்கு அனுப்புவேன்னு சொல்றாங்க. அவர்களோட ஆதரவுல ஒரு ஆட்சி அமைஞ்சுருந்தா அத நடத்திருப்பாங்க. ஆனா திமுக என்ன பண்ணுச்சு, கடற்கரையில் ஒப்புக்குன்னு ஒரு உண்ணாவிரத நாடக நடத்திட்டு மழை விட்டால் தூவானம் விடலைன்னு சொன்ன ஆளு தானே கலைஞர்.

அதிமுக திமுகவுக்கு மாற்றுன்னு வந்த எல்லா கட்சிகளும் கூட்டணிக்கு போயிட்டாங்க, இன்னமும் நாம் தமிழர் தனியா தான் போட்டியிடுறீங்க, மோசமான நிதி சூழ்நிலையியும் இதான் தனியா தான் தொடரீங்களா?

அப்படித்தான் தொடர்வேன், இறையன்பு சொல்றது மாதிரி கற்றறிவு மறந்துரும் பட்டறிவு மறக்காதுன்னு. எனக்கு வெற்றி தோல்வி பத்தி எல்லாம் கவலை இல்ல, என் முன்னோர்கள் எனக்கு கத்துக்கொடுத்த படிப்பினை. அனுபவங்கள எல்லாம் தவறுகள்ல இருந்து தானே பிறக்குது.வரலாறு தெரியாதவன் இங்கே வழிநடத்த முடியாதுல்ல, தனிச்சு நிக்கிறது நாம் தமிழரோட சிறப்புன்னு மக்களே கொண்டாடுற காலம் சீக்கிரமே வரும்

மண் சார்ந்த படங்களையும் ,புரட்சி படங்களையும் எடுத்தவர் நீங்க, இன்னைக்கு தமிழ் சினிமாவும் அதற்கான தேவைகள் இருக்கும்போது சீமான் சினிமாவுல் இல்லாம போயிட்டோமே என்கிற வருத்தம் இருந்துருக்கா?

அந்த வருத்த இருந்துருக்கு. ஆனாலும் சினிமாவுல என்னோட கருத்துக்கள் தானே படமா வருது, தம்பி சமுத்திரக்கனி எடுத்த சாட்டை படம் நாம சொன்ன தனித்திறன் கல்விய பத்தி பேசுது.நான் படம் பண்ணலைன்னாலும் நாம் மேடைகளில பேசுறது திரைப்படங்களில உரையாடல வர்றது மகிழ்ச்சி தானே. நானே படம் பண்ணுவேன் என்ன 60 நாள் 90 நாள் என மொத்தமா என்னய ஒப்புக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு ஆனாலும் சீக்கிரம் படம் பண்ணுவேன்.அப்படி எடுக்கிறதா இருந்தாலும் தயாரிக்க தயாரிப்பாளர் வரணும், நடிக்க வர்றதுக்கு நடிகர்கள் பயப்படுறாங்க, வாடகைக்கு வீடு கொடுக்கவே பயப்படுறாங்க, பொறுத்திருந்து பார்ப்போம்.

சீமான்

விஜய் க்கு கதை சொல்லிருந்தீங்க, சிம்பு கூடவும் பேசிருந்தீங்க?

தம்பி விஜய் கூட படம் பண்ற திட்டம் இருந்தது உண்மை தான், கதை எல்லாம் சொல்லிட்டு நான் ஆறு மாசம் சிறைக்கு போயிட்டேன். ஆர் பி சவுத்ரிக்கு பண்ணலாம்னு தம்பி சொன்னப்போ என்னய கதை சொல்ல தாணு அண்ணன் தான் அனுபிருக்கார் அவருக்குதான் பண்ணனும்னு சொன்னேன். கிளைமாக்ஸ் காட்சியில நிறைய அரசியல் இருக்கேன்னு தம்பி சொல்லுச்சு, அப்றம் எனக்கு குடுத்த அதே தேதிதான் துப்பாக்கி படமா மாறுச்சு. சிம்பு கூடவும் பேசுனதும் நடக்க கூடிய சூழல்ல தான் இருந்துச்சு, இப்போ காலங்கள் மாறிப்போச்சு பார்க்கலாம்.

வடிவேலு எனும் கலைஞன் தேங்கி நின்னப்போ ரொம்ப உதவிகரமா இருந்தது நீங்க தானே?

வடிவேலு நான் எப்போவும் பங்காளின்னு தான் கூப்பிடுவேன்.ஒரு மகா கலைஞன் இந்த வடிவேலு, நடக்க கூடாத விஷயங்கள் நடந்துருச்சு.என் ராசாவின் மனசுலே நடிக்கும்போது இம்சை அரசன்ல ஹீரோவா நடிப்பார்னு யாராச்சும் நினைச்சுப்பார்த்துருவோமா, தேவர் மகன் படத்துல ஆஸ்பத்திரிகாட்சியில் படுத்துக்கிட்டே நடிப்புல மிரட்டிருக்காருன்னா எவ்வளவு பெரிய கலைஞன இருப்பார்னு. திறமைய காலம் வீணாக்கிட கூடாதுன்னு கோ.க மணியோட பையன் மூலம் பேசி நடிக்க ஏற்பாடு பண்ணுனேன்.

மேடைகளில் அதீத கற்பனைகள்ல ஆமைக்கறி கதைகள் சொல்றதா சொல்றாங்க?

விஜய் சேதுபதியோட பிரச்சனை சரி ஆகிருச்சா?

கடைசி விவசாயி படம் பற்றி?

விஜயலட்சிமியிம் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் ..?

சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்கிறதே

அடிக்கடி வீடு மாத்த வேண்டிய சூழல்?

விரிவாக பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொலியை பார்க்கவும்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?