சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் Twitter
தமிழ்நாடு

Sharmika : சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் - விரைவில் கைது நடவடிக்கையா?

ஷர்மிகா பதிவுபெற்ற மருத்துவர் என்பதால், அவரது விளக்கத்தின் அடிப்படையில், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்கெனவே கூறியிருந்தது.

Priyadharshini R

பாஜகவின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருப்பவர் டெய்சி சரண். இவரின் மகள் தான் ஷர்மிகா. சித்த மருத்துவரான இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.

இவர் அவ்வபோது பல ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து வருவார். உடல் நலம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்து வருவார். அதில் சில பதில்களுக்காக ட்ரோல்களில் சிக்கிக் கொண்டார்.

நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் நமக்கு ஜீரணம் ஆகாது, ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை ஒரேநாளில் கூடும், கணவன் மனைவி சேர்வதால் மட்டும் குழந்தை பிறந்துவிடாது, பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்தக் கூடாது, குப்புறப்படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும்

என்றெல்லாம் ஷர்மிகா பேசியிருந்தார்.

Dr. Sharmika

இவர் சொல்வதற்கு மருத்துவ ரீதியாக எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்காகவே இவ்வாறு மருத்துவர் ஷர்மிகா இவ்வாறு பேசி வருவதாக பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவர் ஷர்மிகா,சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து மருத்துவர் ஷர்மிகா ஜனவரி 24ஆம் தேதி அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள இயக்குனரக அலுவலகத்தில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

ஷர்மிகா பதிவுபெற்ற மருத்துவர் என்பதால், அவரது விளக்கத்தின் அடிப்படையில், அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்கெனவே கூறியிருந்தது.

இந்த நிலையில் சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மீண்டும் 2 பேர் புகார் அளித்திருக்கின்றனர்.

ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து, சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?