டீச்சர் To யாசகர் : இன்ஸ்டாவில் வைரலாகும் பர்மா பாட்டியின் மனதை கணக்க வைக்கும் கதை! Twitter
தமிழ்நாடு

டீச்சர் To யாசகர் : இன்ஸ்டாவில் வைரலாகும் பர்மா பாட்டியின் மனதை கனக்க வைக்கும் கதை!

Priyadharshini R

சமூகவலைதளங்களில் அன்றாடம் பல வீடியோக்களை பார்க்கிறோம்,சில வீடியோக்களை சாதரணமாக கடந்து சென்றாலும் சில வீடியோக்கள் நம்மை பாதிக்கும். அப்படி வைராகும் வீடியோக்கள் ஏராளம்.

அந்த வகையில் பர்மாவில் இருந்து வந்த மெர்லின் என்ற மூதாட்டியின் கதை காண்போரை கண்கலங்க செய்கிறது. யார் இந்த மெர்லின் பாட்டி? பர்மாவில் டீச்சராக இருந்துவிட்டு சென்னையில் சாலையோரம் யாசகம் பெறும் நிலை எப்படி ஏற்பட்டது?

இவர் கடந்து வந்த இன்னல்கள் என்னென்ன இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இன்ஸ்டா ரீலீஸில் வைரலாகும் பர்மா பாட்டியின் பெயர் மெர்லின், இவர் இளம் வயதிலேயே தாயை இழந்து தந்தையுடன் வசித்துவந்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பவரை மெர்லின் தனது 18 வயதில் தந்தையின் கட்டாயத்தின் பெயரில் பர்மாவில் இருந்த ஒரு சர்ச்சில் திருமணம் செய்துகொண்டார்.

பர்மாவில் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துள்ளார் மெர்லின்.

அதன்பின்னர் மெர்லினை கணவர் சாமுவேல் ராஜ் தனது சொந்த ஊரான மேலூர் அருகில் இருக்கும் கொட்டாம்பட்டிக்கு அழைத்துள்ளார். கணவருக்காக மெர்லின் அங்கு வந்து வாழ்ந்துள்ளார். இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருந்திருக்கின்றனர்.

வறுமையில் வாடிய குடும்பத்தை சாமுவேல் சரியாக கவனித்துகொள்ளவில்லை, பசியும் பட்டினியுமாக 4 குழந்தைகளும் வாடியுள்ளனர். இதில் ஒரு மகன் இறந்தும் போயிக்கிறான்.

என்ன தான் கணவர் சம்பாதித்தாலும் குடும்பத்தை கவனிக்க பணம் எதுவும் கொடுக்கவில்லை, கிராமத்தில் சென்று வேலை கூட பார்க்க முடியாத சூழலே இருந்திருக்கிறது.

இது குறித்து மெர்லின் பாட்டி கூறுகையில்,

அந்த ஊரில் இருப்பவர்கள் தன்னை பாலியல் தேவைக்காக அழைத்தாகவும், அதனால் அங்கிருந்து குழந்தைகளுடன் சென்னைக்கு தஞ்சம் புகுந்ததாகவும் கூறுகிறார்.

சென்னைக்கு வந்தும் கஷ்டம் மேலும் ஆட்கொண்டது. ”நான் படித்திருந்தாலும் வீட்டு வேலை செய்தேன், அங்கும் எனக்கு சரியாக பணம் வரவில்லை.”

”என் குழந்தைகளுக்கு மூன்று வேளை சாப்பாடு கூட என்னால் போடமுடியவில்லை. அதன் பின்னர் அவர்களே அவர்களை பார்த்துக்கொண்டார்கள்.

அவர்கள் வயிற்றையே அவர்களால் பார்க்க முடியவில்லை, அப்புறம் எப்படி என்னை பார்த்துக்கொள்வார்கள், நான் வீட்டை வீட்டு வெளியேறி, சாலையோரங்களில் பிச்சை எடுத்தேன்.

சில சமயங்களில் சாப்பாடு கிடைக்கும் சில சமயங்களில் ஒன்றுமே இருக்காது. இப்படியே என் வாழ்க்கை நகர்கிறது.

எனக்கு வேண்டியது எல்லாம் பணமோ, துணியோ, நகையோ இல்லை, கடவுள் என்னை சீக்கிரம் அழைத்துகொள்ள வேண்டும்.”

81 வயதாகும் பர்மா பாட்டியின் கதை இணையத்தில் வைரலானதையடுத்து பலரும் அவரை அடையாளம் கண்டு வருகின்றனர், சந்தித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?