kavitha ramu Facebook
தமிழ்நாடு

"செல்லோ... நாளைக்கு லீவு" - கலெக்டருக்கு இன்ஸ்டாவில் ஐஸ் வைக்கும் 2கே கிட்ஸ்!

Antony Ajay R

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நாளும் பல வேடிக்கைகளை நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக 2கே கிட்ஸ் இன்ஸ்டாவை வைத்துக் கொண்டு செய்யும் சேட்டைகளுக்கு அளவே கிடையாது.

ட்விட்டர், இன்ஸ்டாவிலிருக்கும் பிரபலங்களை டேக் செய்து போஸ்ட் செய்வது மெஸ்ஸெஞ்சரில் பர்பாமன்ஸ் செய்வதில் 2கே கிட்ஸ்களை அடித்துக்கொள்ள முடியாது.

யாரும் யாரையும் எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என்ற வசதியை இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. இதனை வைத்து மாணவர்கள் ஆசிரியர்களை எளிதாக தொடர்பு கொண்டு படித்து முன்னேருவார்கள் என்று எதிர்பார்த்தால்... கலக்டருக்கே நேரடியாக மெசேஜ் செய்து லீவு விடுங்க எனக் கெஞ்சுகின்றனர்!

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தனது பேஸ்புக் பக்கத்தில் இன்ஸ்டாவில் வந்த சில குறுஞ்செய்திகளை பகிர்ந்திருந்தார்.

அதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்குமாறு அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

"ப்ளீஸ் மேம்"

"படிச்சு படிச்சு பைத்தியம் ஆகுது மேம்"

"நாளைக்கு லீவு விடுங்க கலெக்டர் அம்மா"

"செல்லம் நாளைக்கு லீவு"

"ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு" என டிசைன் டிசைனாக கோரிக்கைகளை அடுக்குகின்றனர்.

ஒரு நாள் மழைக் காரணமாக லீவு விட்ட பின்னர், "உங்களை மறக்கவே முடியாது... தேவதை" என உருகிறார் ஒரு மாணவர்.

இந்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் பகிர்ந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, "இன்ஸ்டாவில் சில கோரிக்கைகள்" என தலைப்பிட்டிருந்தார்.

கவிதா ராமு கடந்த 2021ம் ஆண்டு முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடனக்கலைஞரும் கூட என்பதால் இளைய தலைமுறையில் இவருக்கு ரசிகர்பட்டாளமே இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?