Vishnu Vishal and His Father

 

Twitter

தமிழ்நாடு

விஷ்ணு விஷால் Vs சூரி : 2.7 கோடி ரூபாய் மோசடி வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்

சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாகத் தெரிவித்தார்.

Antony Ajay R

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் சூரி இணைந்து வீர தீர சூரன் என்ற திரைப்படத்தை நடிக்க ஒப்பந்தமாகிப் படப்பிடிப்புகள் நடைபெற்றன. அதில் சூரிக்கு ரூபாய் 40 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் சம்பளப் பணத்தைத் தராமல், பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளைக் கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவுடன் சேர்ந்து கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த சிறு சேரியில் நிலம் வாங்குவதற்காக நடிகர் சூரி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜாவிடம் பல்வேறு தவணைகளாக ரூபாய் 3.10 கோடி கொடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vishnu Vishal With Soori

இந்நிலையில் நிலம் வாங்கிய பிறகுதான் பல பிரச்னைகள் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிலத்தை திருப்பி வாங்கி கொள்வதாகவும் பணத்தை திருப்பித்தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாகத் தெரிகிறது. ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதி தொகையான ரூ. 2.70 கோடியைச் சூரிக்கு தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த சூரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1ஆம் தேதி புகார் அளித்தார். அடையாறு காவலர்கள்முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Vishnu Visha with His Dad

இந்நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவிலிருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற பண மோசடி செயல்களில் ஈடுபடக்கூடாது கருத்து தெரிவித்தார். மேலும், கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி விசாரணை நடத்தவேண்டும் எனவும், இதனைக் கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி அதை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?