Tamil Nadu Man Collects And Preserves Old Phones For Next Generations Twitter
தமிழ்நாடு

பழைய ஃபோன்களை அடுத்த தலைமுறைக்காக சேகரித்து வைக்கும் இளைஞர் - என்ன காரணம்?

Priyadharshini R

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பொழுதுபோக்கு இருக்கும். சிலருக்கு புத்தகம் படிப்பது, விளையாடுவது, செல்போன் பயன்படுத்துவது என பல விஷயங்கள் இருக்கும்.

இதனை தாண்டி சிலர் அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை சேகரிப்பார்கள், உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் பழைய நாணயங்களை சேகரிப்பர், பழங்கால கலைப்பொருட்கள் ஆகியவற்றை சேகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்திலிருந்து இருக்கும் மொபைல் போன்களை சேகரித்து வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த இந்த மனிதர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசிக்கும் ஏர்வாட் என்பவர் பழைய கீபேட் மொபைல் போன்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆரம்பகால நோக்கியா மாடல்கள் முதல் பல்வேறு பிற பிராண்டுகள் வரை அவரது சேகரிப்பில் நிறைய கீபேட் ஃபோன்கள் உள்ளன.

சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடல்கள் மேல் மோகம் கொண்டு இருக்கும் உலகத்திற்கு மத்தியில் எர்வட்டின் தனித்துவமான பொழுதுபோக்கு பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

இந்த மொபைல் போன் மாடல்களைப் பாதுகாப்பதற்கான காரணம் என்ன என கேட்டபோது, ஒவ்வொரு மொபைல் ஃபோனின் வரலாற்றையும் புரிந்துகொள்வது முக்கியம் என்று எர்வட் கூறியிருக்கிறார்.

சந்தையில் கிடைத்த முதல் மொபைல் கைபேசிகளைப் பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

எர்வட்டின் சேகரிப்பில் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளிலிருந்தே மொபைல் போன்கள் உள்ளன. இது பல ஆண்டுகளாக மொபைல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது.

என்ன தான் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்தாலும் பழைய கீபேட் ஃபோன்களுக்கென ஒரு மவுசு இருந்தது என்று சொன்னால் அதுமிகையாகாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?