தமிழ் புத்தாண்டு 2023: தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன்? canva
தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு 2023: தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

தமிழ் புத்தாண்டின் வரலாறு என்ன? இதன் சிறப்புகள் என்ன? இங்கு காணலாம்

Keerthanaa R

ஆண்டுதோறும் சித்திரையின் முதல் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது இது ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரும்.

என்னதான் டிசமப்ர் 31 இரவில் 12 மணிக்கு அடுத்த வருடத்தின் தொடக்கத்தை கேக் வெட்டி பார்ட்டி வைத்து கொண்டாடினாலும், தமிழ் புத்தாண்டு என்பது தமிழர்களின் பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டின் வரலாறு என்ன? இதன் சிறப்புகள் என்ன? இங்கு காணலாம்

வரலாறு

9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை, தென்னிந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட சோழர்களின் காலத்தில் தான் தமிழ் புத்தாண்டு முதன் முதலில் கொண்டாடப்பட்டது என வரலாறு சொல்கிறது.

சோழர்களின் காலத்தில் தான் தமிழ் நாள்காட்டி உருவாக்கப்பட்டு, சித்திரை 1ஆம் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது

முக்கியத்துவம்

சூரிய நாட்காட்டியைப் பின்பற்றுபவர்களுக்கு, இரண்டு அரைக்கோளங்களிலும் (hemisphere) சூரியன் நடுவில் இருந்த மத்திய புள்ளி புத்தாண்டுக்கான சிறந்த தொடக்க புள்ளியாக இருந்தது.

இந்த நடுநிலையானது, வாழ்வின் சமநிலையை குறிப்பதாக இருந்தது. வாழ்க்கை, உறவுகள், நமது இலக்கை நோக்கிய பயணம், அனைத்திலும் சமநிலை பெற்று புதிய வாழ்வியலுக்கான தொடக்கப்புள்ளி தான் இந்த புத்தாண்டு.

எப்படி கொண்டாடப்படுகிறது?

தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவர். வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து, புத்தாடைகள் உடுத்தி, கோவில்களுக்கு சென்று அல்லது வீடுகளில் கடவுளை வழிபடுகின்றனர்.

வாசலில் போடப்படும் அரிசி மாவு கோலம் தொடங்கி, பொங்கல் வைத்து உற்றார் உறவினருடன் இந்த நாளை பண்டிகையாக கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டின் ஸ்பெஷல் டிஷ் மாங்காய் பச்சடி.

மா பலா வாழை ஆகிய முக்கனிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தட்டில் வைக்கப்படும் பொருட்கள்

இந்த நாளில் நாம் முதலில் பார்க்கும் விஷயம் தான் அந்த ஆண்டை நமக்கு தீர்மானிக்கிறது என்கிற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. ஆகையால், தட்டில் தங்கம், வெள்ளி போன்ற செல்வங்களுடன், பூ, பழம், கண்ணாடி, அரிசி, வெற்றிலை பாக்கு ஆகியவை கடவுளுக்கு முன் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

பருவகால பழங்களான மாம்பழம், பலாப்பழம், அரிசி நமது நல்ல ஆரோக்கியத்தை குறிக்கிறது. பணம், தங்கம், வெள்ளி போன்றவை செல்வத்தை, வெற்றிலை பாக்குகள் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தவும் வைக்கப்படுகிறது.

கண்ணாடி நம் வாழ்வில் இருக்கும் நல்லவைகளை பிரதிபலித்து அதனை பெருக்க உதவுகிறது

புத்தாண்டும் மாங்காய் பச்சடியும்

தமிழ் புத்தாண்டின் தவிர்க்கமுடியாத உணவாக மாங்காய் பச்சடி சமைக்கப்படுகிறது.

பொதுவாக பண்டிகைக் காலங்களில் சமைக்கப்படும் உணவுகளில், அந்த அந்த பருவத்தில் கிடைக்கும் பிரதான காய்கறி அல்லது பழங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

கோடை காலத்தில் வரும் பண்டிகை தமிழ் புத்தாண்டு. கோடை காலத்தில் கிடைக்கும் மாங்காய், மாம்பழங்கள் அதிகம் கிடைப்பதால் இந்த உணவு வகை பரவலாக சமைக்கப்படுகிறது.

இந்த மாங்காய் பச்சடியில் மாங்காயின் துவர்ப்பு , வெல்லம் இனிப்பையும், சிறிதளவு வேப்பிலை கசப்பையும், புளி புளிப்பு சுவையையும், மிளகாய் காரத்தையும் மற்றும் உப்பு உவர்ப்பும் கலந்து அந்த உணவை போல வாழ்க்கையும் அறுசுவை நிறைந்தது என எடுத்துக்காட்டும் விதமாக சமைக்கப்படுகிறது.

வேறு எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?

சித்திரை ஒன்றாம் நாள் கேரளாவில் விஷு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

வடமாநிலங்களில் இந்நாள் பைசகி என்ர பெயரிலும், பெங்கால், அசாம் போன்ற இடங்களில் பிஹு என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் சித்திரை ஒன்றாம் நாள் அலுத் அவுருத்தா என்ற பெயரில் சிங்கள புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

தவிர இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?