இனிகோ மற்றும் சகாயமேரி

 

Twitter

தமிழ்நாடு

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : பிணையில் வெளியான சகாய மேரியை வரவேற்ற திமுக எம்.எல்.ஏ

மாணவியை மதமாற்றம் செய்து கொள்ள வற்புறுத்தியதும், அதனை மறுத்ததற்காக அவரை விடுதி காப்பாளர் தண்டித்ததுமே மாணவியின் தற்கொலைக்குக் காரணம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. அக்கட்சியின் சார்பில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

Antony Ajay R

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளர் சகாய மேரி பிணையில் விடுவிக்கப்பட்ட போது திமுக எம்.எல்.ஏ அவரை நேரில் சென்று வரவேற்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அரியலூரைச் சேர்ந்த மாணவி தஞ்சாவூரில் உள்ள தனியார் கிறிஸ்தவக் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9ம் தேதி தங்கியிருந்த விடுதியில் பூச்சி மருந்து குடித்த மாணவி 19ம் தேதி உயிரிழந்தார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான உன்மைக் காரணம் இன்று வரை உறுதி செய்யப்படாத நிலையில், பள்ளியில் மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியது தான் காரணம் என ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது மாணவியின் தந்தை வைத்த கோரிக்கையின் படி, மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியை மதமாற்றம் செய்து கொள்ள வற்புறுத்தியதும், அதனை மறுத்ததற்காக அவரை விடுதி காப்பாளர் தண்டித்ததுமே மாணவியின் தற்கொலைக்குக் காரணம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. அக்கட்சியின் சார்பில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் மாணவியின் தற்கொலைக்கு அவரது குடும்பச் சூழலே காரணம் என்றும் சிலரால் கூறப்படுகிறது. மாணவியின் அம்மா தற்கொலை செய்து இறந்திருக்கிறார். அதற்குப் பிறகு அப்பா மற்றொரு திருமணம் செய்து கொண்டார். இதனால் வீட்டுக்குச் செல்லக்கூடப் பிடிக்காத மாணவி, விடுமுறை நாட்களிலும் விடுதியிலேயே தங்கியிருந்தார். விடுதியில் மாணவியை அக்கறையுடன் கவனித்தவர் சகாய மேரி, எனவே தற்கொலைக்கு அவர் காரணமாக இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

இனிகோ மற்றும் சகாயமேரி

இந்நிலையில் தனக்கு பிணை கோரி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் விடுதி காப்பாளர் சகாயமேரி மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் விடுதலையானார். இவரைத் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த படம் தற்போது வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?