அண்ணாமலை Twitter
தமிழ்நாடு

தேஜஸ்வி சூர்யா: விமானத்தில் அவசர கால கதவு திறக்கப்பட்டதா? என்ன நடந்தது? அண்ணாமலை விளக்கம்

விமானம் தரையில் இருக்கும்போதே இண்டிகோ விமானத்தில் அவசரக் கதவை பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக எழுந்த சர்ச்சையில் விமானத்தின் அவசர கதவு திறக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

Priyadharshini R

விமானம் தரையில் இருக்கும்போதோ அல்லது வானத்தில் பறக்கும்போதோ அவசர கால கதவை ஒருபோதும் திறக்க முயற்சி செய்யக்கூடாது.

பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில்,

விமானம் தரையில் இருந்தபோது, அதன் அவசர வழியை திறந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், விதிமுறைகளின்படி, பயணிகள் இறக்கிவிடப்பட்டு, முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே விமானம் புறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் டிசம்பர் 10, 2022 அன்று சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு 6E 7339 விமானத்தில் பயணித்த ஒரு பயணி தற்செயலாக அவசரகால கதவைத் திறந்தார் என்று மட்டுமே அதில் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து பயணிகள் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில், விமான பயணி ஒருவரால் இந்த தவறு நடந்தது என்று குறிப்பிட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையானது, இதனையடுத்து இது குறித்து பல்வேறு விளக்கங்களை அளிக்கப்பட்டு வரும் வேளையில் என்ன நடந்தது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலை விளக்கம் என்ன?

தேஜஸ்வி அருகில் தான் அமர்ந்ததாக அண்ணாமலை தெரிவித்தார்.

தேஜஸ்வி சூர்யா அவர் இருக்கைக்கு மேலே இருக்கும் ஏசி காற்று வசதியை அட்ஜஸ்ட் செய்த போது அவர் அவசர கால கதவுகள் சற்று திறந்து இருப்பதை பார்த்ததாகவும், உடனே விமான ஊழியரிடம் அது குறித்து தெரிவித்ததாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பின்னர் இது எப்படி நிகழ்ந்தது என்றும் விமான ஊழியர்கள் தேஜஸ்வி சூர்யாவிடம் கேட்டுள்ளனர் அங்கு இருக்கும் இன்ஜினியர்கள் வந்து அதனை சரி செய்தனர்.

தேஜஸ்வி சூர்யா படித்தவர், விமானத்தின் அவசர கதவு திறக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. கதவிலிருந்து இடைவெளியை பார்த்ததும் விமான குழுவை அழைத்து கூறினார்.

அதை நானும் பார்த்தேன், அவர் தவறு ஏதும் செய்யவில்லை, இருப்பினும் அவர் எம்பி என்ற பொறுப்பில் இருப்பதால் அங்கு இருக்கும் மற்ற பயணிகளிடம் மன்னிப்பு கூறினார் என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

விமானத்தில் அவசர காலக் கதவுகள் ஏன் இருக்கிறது?

அவசர காலக் கதவுகள் என்பது விமானத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ பயணிகள் மற்றும் பணியாளர்கள் இந்த வழியாக விமானத்தில் இருந்து விரைவாக வெளியேற வைக்கப்படுகின்றன.

விபத்து தரையிறக்கம், எரிதல், கேபினில் புகை நிரம்பும்போது, அல்லது உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய பிற பாதிப்புகளின் போது விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த அவசர காலக் கதவுகள் இருக்கிறது.

அவசரகாலத்தின் போது வெளியேறுவதற்கு பணியாளர்களின் சில உத்தரவுகளின் கீழ் மட்டுமே இந்த கதவுகள் திறக்கப்பட வேண்டும், வேறு எந்த சூழ்நிலையிலும் திறக்கப்படாது.

விபத்து காலத்தில் விமானத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளை 90 வினாடிகளுக்குள் வெளியேற்ற முடியும் என்பதை விமான உற்பத்தியாளார்கள் நிரூபிக்க வேண்டும்.

ஒரு பயணி விமானம் தரையில் இருக்கும்போது அவசரகால கதவைத் திறக்க முடியுமா?

இந்த விவரகாரம் போல, விமானம் தரையில் இருக்கும் போது ஒரு பயணியால் அவசரகால கதவைத் திறக்க முடியும்.

உலகெங்கிலும் அவ்வாறு செய்த பல நிகழ்வுகள் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?