போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இன்று இரவு 12 மணி முதல் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசதொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்.
பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும்.
எங்களை எதிர்த்து வேலைநிறுத்த அறிவிப்பை செய்வது பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, அரசியல் உள் நோக்கம் கொண்டது எனக் கூறிய அமைச்சர் சிவசங்கர், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இன்று காலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. மதுரை பேருந்து நிலையம் வெரிச்சோடி காணப்படுவதுடன் 10 விழுக்காடு பேருந்துகள் கூட இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அரசு பேருந்துகள் இல்லாததால் தனியார் பேருந்துகள் விலையை உயர்த்திவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust