Travel: ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த சுற்றுலா பயணிகள் - கட்டணம் எவ்வளவு தெரியுமா? ட்விட்டர்
தமிழ்நாடு

Travel: ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த சுற்றுலா பயணிகள் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இங்கிலாந்திலிருந்து வந்த சுமார் 16 சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இதில் அவர்கள் பயணித்துள்ளனர்.

Keerthanaa R

ஊட்டி நீராவி மலை ரயிலை இங்கிலாந்தை சேர்ந்த 16 சுற்றுலா பயணிகள் ரூ.3 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த ரயிலில் பயணித்தபடி இவர்கள் ஊர் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்தியாவை சுற்றிப்பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமாக வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் விஷயங்களில் ஒன்று, ஊட்டி நீராவி மலை ரயில்.

பச்சைப் பசேல் என்று இயற்கை எழில்கொஞ்சும் மலைகள், நீரூற்றுகள், சிலு சிலுவென்று முகத்தில் அடிக்கும் பூங்காற்று , சன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தால் தெரியும் இந்த உலகின் அழகு!

இந்த அனுபவத்தை பெற வேண்டி, இங்கிலாந்திலிருந்து வந்த சுமார் 16 சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இதில் அவர்கள் பயணித்துள்ளனர். ரூ.3.6 லட்சத்திற்கு ரயிலை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்த்தை பெற்றது ஊட்டி நீராவி மலை ரயில். ஆசியாவின் மிக நீண்ட பல்சக்கர தண்டவாள அமைப்புடன், நூற்றாண்டுகளாக செயல்பட்டு வருகிறது

இந்த மலை ரயிலி பயணிக்க ஆன்லைன் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம், அல்லது வாடகைக்கு எடுத்தும் பயணிக்கலாம். இங்கு சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டம் இது.

இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் நேற்று காலை 10 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு 1.30க்கு குன்னூர் வந்தடைந்தனர். இவர்கள் லோகோ பணிமனையை பார்வையிட்டதுடன், நீராவி ரயில் இன்ஜின் இயக்கம் குறித்தும் தெரிந்துகொண்டனர்.

கடந்த வாரம் இந்தியா வந்த இவர்கள் டார்ஜிலிங், சிம்லா ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு தமிழ்நாடு வந்துள்ளனர். ஊட்டி மலை ரயிலில் பயணித்து, அது குறித்து அறிந்துகொண்டது புதிய அனுபவமாக இருந்தது என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?