ஜல்லிக்கட்டு

 

Facebook

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு : உரிமையாளரை குத்திக் கிழித்த காளை -திருச்சி பெரிய சூரியூரில் விபரீதம்

Antony Ajay R


பொங்கல் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து அதன் பகுதியாக ஜல்லிக்கட்டு போட்டிகளும் விமரிசையாக நடந்து வருகின்றன. நேற்று உலக புகழ்பெற்ற அவனியாபுரத்திலும், இன்று மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. மேலும் பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் வழக்கம் போல தை மாதம் 2-ம் நாளான இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதற்காக மொத்தம் 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு


காலை 8 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

காளையர் சீறப்பாயக் காளையர்கள் பாய்ந்து அடக்கக் கோலாகலமாகப் போட்டிகள் நடைபெற்று வந்தது. வீரர்களிடம் சிக்காமல் வாடி வாசலில் நின்று விளையாடிய காளைகளை பார்த்து மக்கள் ஆர்ப்பரித்தனர்.

இதற்கிடையே 112 எண் கொண்ட காளையை அதன் உரிமையாளர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (வயது 29) வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்து கொண்டிருந்தார்.

ஜல்லிக்கட்டு

அப்போது எதிர்பாராத விதமாக அந்த காளை, தன் உரிமையாளரான மீனாட்சி சுந்தரத்தை முட்டியது. இதில் குடல் சரிந்து மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அதிக ரத்தம் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்தார் மீனாட்சி சுந்தரம்.

நேற்று அவனியாபுரத்தில் பாலமுருகன் என்ற பார்வையாளரின் மரணத்தையடுத்து இது இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் இரண்டாவது மரணமாகும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?