திருச்சி சிவா Twitter
தமிழ்நாடு

திருச்சி சிவா உருக்கம் : சிறுபான்மையினர் மனதில் பயத்தை விதைக்கக்கூடாது

NewsSense Editorial Team

பொது சிவில் சட்டம் தொடர்பான கிரோடி லால் மீனாவின் தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தக் கூடாது என திருச்சி சிவா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தன் கருத்தை உருக்கமாக பதிவு செய்தார்.

என்ன பேசினார்? வாருங்கள் பார்ப்போம்.

இதற்கு முன்பே பல முறை இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் அவை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படவில்லை. இன்றும் நாங்கள் அதையே செய்கிறோம் என்றார் சிவா

இந்தியா என்கிற நாட்டின் அடித்தளமே கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை தான். என்றும், இப்போது அந்த இரண்டுமே பெரும் அபாயத்தில் உள்ளது எனவும் கூறியிருந்தார் சிவா

"இந்த அவையில், தனி நபர் கொண்டு வந்துள்ள பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டால், என்னவெல்லாம் நடக்கலாம் என நான் சில விஷயத்தை ஊகித்துப் பார்க்கிறேன்.

காரணம், என்னுடைய தனி நபர் மசோதா நிறைவேற்றப்பட்ட போது, என்ன ஆனது, என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை நான் அறிவேன்." என்றார்

மேலும் பேசிய சிவா, ஒரு முறை ஒரு மசோதா அறிமுகப்படுத்திவிட்டால், அம்மசோதா இந்த அவையின் சொத்தாகிவிடும். தன்னிச்சையாக அது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

அப்படி கருத்தில் எடுத்துக் கொண்டு அவையில் விவாதிக்கப்பட்டுவிட்டால், அடுத்த கட்டமாக வாக்கெடுப்புக்குச் சென்று, கடைசியில் பெரும்பான்மை எண்ணிக்கையினால் மசோதா நிறைவேற்றப்பட்டுவிடும்.

"அவைத் தலைவர் அவர்களே... இந்த நாட்டில் வாழும் மைனாரிட்டி சமூக மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என ஊகித்துப் பார்க்கிறேன். எந்த ஒரு சூழலிலும் அவர்கள் மனதில் அச்சத்தை விதைத்துவிடக் கூடாது."

அவைத் தலைவர் அவர்களே... நீங்கள் மெத்தப் படித்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இஸ்லாமியர்கள் அனைவரும் என்னோடு பாகிஸ்தானுக்கு வாருங்கள் என மொஹம்மத் அலி ஜின்னா அழைப்பு விடுத்தார். ஆனால் இங்கு வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்களோ, நாங்கள் இஸ்லாமியர்கள் தான் ஆனால் நாங்கள் இந்தியர்கள். இந்தியா எங்கள் நாடு என பதில் கூறி, இந்தியாவிலேயே வாழ்ந்தனர்.

அவர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கென தனி மத ரீதியிலான சட்டங்கள் இருக்கின்றன. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, மற்ற மைனாரிட்டி சமூக மக்களுக்கும் பொருந்தும்.

திருச்சி சிவா

நாம் எப்போதும், எந்த ஒரு சூழலிலும் அவர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்று மீண்டும் குறிப்பிட்ட திருச்சி சிவா

பொது சிவில் சட்டம் & அது தொடர்பான மசோதாக்கள் என்பது ஒரு பாண்டோரா பாக்ஸ் (Pandora's Box) போன்றது. அதிலிருந்து என்ன மாதிரியான விளைவுகள் வரும் என்பதை நம்மால் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த மொத்த நாடும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றவர், ஒருவருக்கு அவையில் பெரும்பான்மை இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொள்ளக் கூடாது என்றார்.

மேலும், இந்த நாட்டின் எதிர்காலம், இங்கு வாழும் மக்களின் பாதுகாப்பு, இந்தியாவின் தனித்துவம் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்

எனவே இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அம்மசோதாவை அறிமுகப்படுத்தக் கூடாது, இந்த அவையையும், உறுப்பினர்களையும், இந்த நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் சிவ பேசியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?