கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ”காலேஜ் ரோடு” என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் வெளியிடப்பட்டது.
இப்படத்தினை காண கதாநாயகனான லிங்கேஷும், டிடிஎஃப் வாசனும் வந்திருந்தனர். டிடிஃப் வாசன் வெள்ளை நிற மஹேந்திராவில் வந்திறங்கினார். ஆனால் அவர் வந்த வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது.
இதனால் விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதித்து சொகுசு வாகனத்தை பறிமுதல் செய்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரித்ததில், அந்த கார் அவரின் நண்பர் பிரவீன் குமார் என்பருடையது என்றும், கர்நாடகாவை சேர்ந்த அவரின் பெரியப்பாவுக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.
இதற்கிடையில் புத்தாண்டின் போது அவரது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டு பைக்கில் போனால்தானே பிரச்னை அதனால்தான் இப்போது காரில் சென்று கொண்டிருக்கிறேன். இப்போது எப்படி பிரச்னை ஆகும் என்று பார்க்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் தொலைபேசியில் ”நான் ரவுடிலாம் இல்ல அண்ணா... என்ன செய்தாலும் பிரச்னை வருது” என்று அழுகாத குறையாக கதறுகிறார் பிரபல யூடியூபர் டிடிஃப் வாசன்.
மாஸாக பேசிய டிடிஃப் தற்போது கதறுவதை பார்த்த நெட்டிசங்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust