வைகோ டிவிட்டர்
தமிழ்நாடு

கர்ஜித்த வைகோ, பாராட்டிய வெங்கையா நாயுடு - அப்படி என்ன பேசினார்?

Govind

நேற்று நாடாளுமன்ற மேலவையில் - ராஜ்யசபாவில் வைகோ பேசினார். அவர் எழுந்து பேசத் துவங்கியதும் அவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்யா நாயுடு " வைகோ உங்களுக்கு இரண்டு நிமிடம் மட்டும்தான்" என்று சொன்னார். கையில் கத்தையாக பேப்பர்களை வைத்திருந்த வைகோ முதலில் அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு இரண்டு நிமிடம் பெரிய நேரம்தான் சார் என்றார். அவை சிரித்தது.

வைகோ இரண்டு நிமிடத்தில் பேசிய கருத்துக்கள்:

அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வு என்பது இந்த நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷமாக மாறி வருகிறது. உணவுத் தானியங்களின் விலை 7.56 சதவீதம் உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் விலை 17.37 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சமையல் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விலை 9.36% உயர்ந்திருக்கிறது.


"சார் நீங்கள் எனக்கு இரண்டு நிமிடம்தான் ஒதுக்கியிருக்கிறீர்கள். எனவே நான் பல விஷயங்களை விட்டுவிட்டு பேசுகிறேன்" என்று கூறிய வைகோ, நாட்டின் சாதாரண மக்கள் கோவிட் பெருந்தொற்றில் அவதிப்பட்ட பிறகு தற்போது விலைவாசி உயர்வு பேன்டமிக்கில் அவதிப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டார். சாதாரண மக்களும், நடுத்தர வர்க்கமும் தங்கள் வாழ்க்கை ஆதாரங்களை பறிகொடுத்துத் துன்பப்படுகிறார்கள்.

மீனவர்கள் டீசல் விலை உயர்வினால் தொழிலில் பிழைப்பதற்கு சிரமப்படுகிறார்கள். இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் அடிக்கடி மிரட்டப்படுகிறார்கள்.

கச்சா எண்ணெயின் சர்வதேச விலை உயர்வினால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று ஒன்றிய அரசு நியாயம் சொல்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், செஸ் வரி மட்டும் 50% அளவுக்கு இருக்கிறது. தற்போது அரசு ஒரு அடையாள விலை குறைப்பாக பெட்ரோலுக்கு 2.5 ரூபாய் வரி குறைத்திருக்கிறது. இதனால் சாதாரண மக்களுக்கு அடையாள நிவாரணம் மட்டுமே கிடைத்திருக்கிறது.

மக்களை மேலும் காயப்படுத்தும் விதத்தில் அரசு, கோதுமை, அரசி, பால், பால் பொருட்கள் போன்ற உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்திருக்கிறது. இது பொருளாதாரத்தில் பேரழிவைக் கொண்டு வரும். மருத்துவமனைகளின் அறைகள் மற்றும் ஐசியூ எனும் அவசர சிகிச்சைக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதித்திருக்கிறது.

அரசின் தவறான நிதிக் கொள்கை காரணமாக நாட்டின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிரான மதிப்பில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.

என்னுடைய கோரிக்கை என்னவென்றால் ஒன்றிய அரசு சமையல் எரிவாயுவின் விலையை 2014 இல் என்ன விலை இருந்ததோ அந்த அளவுக்கு குறைக்க வேண்டும். மேலும் நாட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்திவாசியப் பொருட்களின் விலைகளை கண்காணிப்பதோடு கட்டுப்படுத்துவதையும் அரசு செய்ய வேண்டும்.

இவ்வாறு பேசி முடித்ததும் அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, “வைகோ நாட்டிலேயே மிகவும் ஆக்ரோஷமாக பேசக்கூடிய தலைவர். அதை இங்குள்ள இளம் உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் வைகோவின் கட்சிக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவு என்பதால்தான் அவருக்கு 2 நிமிடம் மட்டும் பேச ஒதுக்க முடிந்தது.”, என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?