"மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்" - விசிக போராட்டம்! Twitter
தமிழ்நாடு

"மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்" - விசிக போராட்டம்!

ஈ.வி.எம் மிஷின்கள் பயன்படுத்தப்படுவதால் எளிமையாக முறைகேடுகளில் ஈடுபட்டு பாஜக ஆட்சிக்கு வருவதாக நீண்ட காலமாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.

Antony Ajay R

வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளை மும்மூரமாக செய்து வருகின்றன.

இந்த நிலையில் தேர்தலில் ஈ.வி.எம் மிஷின்களை பயன்படுத்தக் கூடாது எனவும், வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த அமல்படுத்த வேண்டும் எனவும் போராட்டத்தை அறிவித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தற்போது நடைபெறும் தேர்தல்களில் மின்னணு முறையில் வாக்குபதிவு செய்ய ஈ.வி.எம் மிஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஈ.வி.எம் மிஷின்கள் பயன்படுத்தப்படுவதால் எளிமையாக முறைகேடுகளில் ஈடுபட்டு பாஜக ஆட்சிக்கு வருவதாக பலவருடங்களாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.

இன்று பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்த திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த போராட்டம் குறித்து அறிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் ஈ.வி.எம் மிஷின்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்து தீர்மானம் நிறைவேறியிருப்பதையும் திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?