வினோத கட்டுப்பாடு விதித்த கிராமம் - ஏன்? Twitter
தமிழ்நாடு

”ஊரில் யார் இறந்தாலும் ஒரே ஒரு மாலைதான் போடுவோம்”- வினோத கட்டுப்பாடு விதித்த கிராமம்- ஏன்?

நூற்றுக்கணக்கான மாலைகளை வெட்டி சுடுகாட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தூவிச் செல்கின்றனர்.

Priyadharshini R

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் ’ஊரில் யார் இறந்து போனாலும் ஒரே ஒரு மாலை’ போடும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு மாலை போட்டு மற்றவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

ஆனால் இங்கு ஒரு கிராமத்தில், இறந்தவர்களுக்கு மாலை போடுவதை தவிர்த்து வருகின்றன்ர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில், ஒரேஒரு மாலைதான் போடவேண்டும் என்ற வழக்கத்தை பின்பற்ற கிராம மக்கள் ஒன்று சேர்ந்து முடிவு எடுத்துள்ளனர்.

இதற்கு கிராம மக்கள் கூறும் காரணம் தான் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

இறந்தவரின் மேலே நிறைய மாலைகள் போடுவதால், அவரின் உடலின் மீது மாலைகள் அப்படியே குவிந்து விடுகிறது.

நூற்றுக்கணக்கான மாலைகளை வெட்டி சுடுகாட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தூவிச் செல்கின்றனர். அப்போது சில நேரங்களில் மாலைகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விபத்துக்குள்ளாகிறது.

மாலைக்கு பதில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 200 வழங்கினால், அந்த தொகையை இறுதிச் சடங்கு நடத்த பயன்படும்.

மேலும் வாழும்போது ஏழை, பணக்காரர் வேறுபாட்டுடன் இருக்கிறார்கள், இறப்பில் அனைவரும் சமம் என்று இவ்வாறு இறந்தவர்களை வழியனுப்பி வைக்கிறோம் என்கின்றனர் கிராம மக்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?