முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தேமுதிக நிறுவனத்தலைவரும் தமிழ் திரையுலக நட்சத்திரமுமான விஜயகாந்த் இன்று காலை இயற்கை எய்தினார்.
கேப்டன் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த அவர் தேசிய அளவில் அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார்.
விஜயகாந்த் மரணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மோடி ட்விட்டரில் குறிப்பிட்டதாவது, "திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவானான இவரது வசீகர நடிப்புத்திறன் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, அவர் பொதுமக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார், தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த அவருடன் பல ஆண்டுகளாக நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்தச் சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி".
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust