"கேப்டன் விஜயகாந்துக்கு மணிமண்டபம்" - பிரேமலதா விஜயகாந்த் பேசியது என்ன? Twitter
தமிழ்நாடு

"கேப்டன் விஜயகாந்துக்கு மணிமண்டபம்" - பிரேமலதா விஜயகாந்த் பேசியது என்ன?

தமிழ்நாடு அரசிடம் விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். நிச்சயம் செய்துகொடுப்பார்கள் என்று நம்புகிறோம். 24 மணி நேரமும் நினைவிடத்தில் பூஜைகள் செய்யப்படும்.

Antony Ajay R

கடந்த 28ம் தேதி காலை மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் உடல் நேற்று மாலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆயிரக் கணக்கில் மக்கள் அலைகடல் போல திரண்டு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இன்று விஜயகாந்தின் கல்லறைக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இன்று அவரது கல்லறையில் வழிபாடு செய்தனர்.

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு நேரிலும் தொலைபேசி வழியாகவும் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசிடம் விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். நிச்சயம் செய்துகொடுப்பார்கள் என்று நம்புகிறோம். 24 மணி நேரமும் நினைவிடத்தில் பூஜைகள் செய்யப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தலாம்” எனப் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?