நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பின்னர் கடந்த மாதம் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி சீமான் மீது புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2 முறை சம்மன் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சமூகவலைதளங்களில் சீமானை எச்சரித்து வீடியோக்கள் போட்டு வந்த விஜய லட்சுமிஉ நள்ளிரவில் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,
”யாரும் தன்னை கட்டாய படுத்தியோ, மிரட்டியோ இந்த வழக்கை வாபஸ் பெற வில்லை. நானாக தான் வாபஸ் பெறுகிறேன்.
சீமானிடம் இது குறித்து பேசினேன், இந்த வழக்கை நான் தொடர்வதாக இல்லை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இந்த வழக்கு தனக்கு திருப்திகரமாக இல்லை. என்னை தவறாக வழி நடத்துகிறார்கள்.
புகார் அளித்த தன்னை மட்டும் அசிங்கப்படுத்தி வந்தனர்.சீமான் மீது காவல்துறையிடம் தான் அளித்த புகார் மீதான விசாரணை மெத்தனமாகவே இருந்தது.
சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.தமிழ்நாட்டில் சீமானுக்கு பவர் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன். தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை, நான் பெங்களூர் செல்கிறேன்” என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக சீமான் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust