AI மூலம் மக்களிடம் பேசிய கலைஞர் மு கருணாநிதி| Live Blog ட்விட்டர்
தமிழ்நாடு
AI மூலம் மக்களிடம் பேசிய கலைஞர் மு கருணாநிதி| Live Blog
இறுதியாக முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் ஏ ஐ காணொளி ஒளிபரப்பப்பட்டது!
Keerthanaa R
கலைஞர் 100 - கலைஞரும் விகடனும் நூல் வெளியீட்டு விழா தொடங்கியது.
கலைஞர் 100 - கலைஞரும் விகடனும் நூல் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் நடக்கிறது. சிறப்பு விருந்தினர் கமல் ஹாசன், மற்றும் முதல்வர் ஸ்டாலின் அரங்கத்திற்கு வருகைதந்துள்ளனர். இவர்களை தவிர திமுக அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வருகை தந்துள்ளார்
அமைச்சர்கள் சேகர் பாபு, மா சுப்ரமணியம், சென்னை மேயர் ப்ரியா ஆகியோர் வருகை
50 ஆண்டுகள் தம்பதிகளே சண்டை சச்சரவு இல்லாமல் இருந்ததில்லை!
கலைஞர் - விகடன் என்ற நான்கு எழுத்துகள் கொண்ட இரு சொற்களும் திருமணமான தம்பதிகள் போல உறவு கொண்டது!
மேடையில் வீற்றிருக்கும் ஆளுமைகளுக்கு நினைவு பரிசு
கலைஞர் 100 - விகடனும் கலைஞரும் னூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
கலைஞர் 100 - விகடனும் கலைஞரும் நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட, சிறப்பு விருந்தினர் நடிகர் கமல் ஹாசன் பெற்றுக்கொண்டார்
அரசியலில் ஊடகங்களை பயன்படுத்துவதில் கலைஞர் சிறந்தவர்!
அரசியலில் ஊடகங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கலைஞரைத் தவிர நன்றாக அறிந்தவர் வேறுயாருமில்லை. அந்த வகையில் நான் கலைஞரின் ரசிகன்.
கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்
அரசியலில் கலைஞரின் சாதனைகளை compare பண்றது கஷ்டம் - இந்து பத்திரிகை தலைவர்
கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்
கலைஞர் பத்திரிகையாளர்களை ஏமாற்றவே மாட்டார் - இந்து பத்திரிகை தலைவர்
மத வாத கருத்துகள் சொல்பவர்களுக்கும் கலைஞருக்கும் ஒத்துப்போகாது!
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து இருக்கிறது. ஆனால் கலைஞரையும் முதல்வர் ஸ்டாலினையும் பத்திரிகையாளர்கள் எளிதாக அணுக முடிகிறது - இந்து பத்திரிகைதலைவர் என் ராம்!
தமிழகத்தின் முகவரி அவரும் தான்
தமிழகத்தின் முகவரி மு க வரிகளை பதிப்பது நியாயம்தானே?
கலைஞரின் பாராட்டு!
கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும், அதைச் சொல்கையிலே பண்பாடு தேவை, என்று செய்கையிலே காட்டியவன் விகடன் தானே - கலைஞரின் கவிதையை மேற்கோள்காட்டிய கமல்ஹாசன்
தாழக் கிடப்பவரை தற்காப்பதே தர்மம்
கலைஞரின் தர்மம் அசோக சக்கரத்தின் தர்மம்
ஆலமரத்தின் கீழ் வளரும் விருட்சம் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆலமரத்தின் அடியில் விருட்சங்கள் வளராது எனும் பொதுக் கூற்றை முறியடித்து தானும் ஒரு விருட்சமாக வளர்ந்துகொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் புகழாரம்
கலைஞர் எழுதும்போது காகிதங்கள் பறக்கும். அதனை கலைவாணர் எடுத்து சேகரிப்பார்!
உங்ககிட்ட பேசவேண்டியத மறக்காம இருக்க பேப்பர்ல எழுதி வச்ச்ருக்கேன். ஆனா 60 வருஷத்துக்கு முன்னாடி கலைஞர் எழுதின வசனம் இன்னும் நினைவில் இருக்கிறது
நடிக்க வர்றவங்களுக்கு கலைஞர் தான் கேட் பாஸ்
நடிக்க வருபவர்களை கலைஞரின் வசனத்தை பேச சொல்வார்கள். வாய் சுத்தம் பார்ப்பதே அவரின் வசனங்களை வைத்து தான்.
நடிக்க வரும் பலருக்கு கலைஞர் தான் கேட் பாஸ். எனக்கு உள்பட
கலைஞரின் நகைச்சுவை நிகரற்றது
சட்டம் என் கையில் படத்தை இயக்கி தயாரித்த டி என் பாலு, சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார்
ஒரு ரசிகனாகவே மாறிட்டார் கலைஞர்!
கலைஞரின் சந்தோஷத்துக்காக நான் குள்ள அப்புவாக வந்து அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு அவரிடம் பரிசு வாங்கினேன். ஒரு குழந்தையாகவே மாறிட்டார். உன்னால வர முடியுமா? நான் வரட்டா என்று கேட்டார்
கலைஞானி பட்டம் கலைஞர் வழங்கினார்
மருதநாயகம் விழாவில் கலைஞானி என்ற பட்டத்தை கலைஞர் எனக்கு கொடுத்தார். அந்த பெயர் நிலைத்துவிட்டது
தசாவதாரத்தில் மணல் கொள்ளை பற்றி பேசச்சொன்னது கலைஞர் தான்!
சிறப்புரை ஆற்ற மேடைக்கு வந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
வாசனின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!
தவறுகள் சரிசெய்யப்படும்!
நடந்த தவறுகளை இங்கே சொல்ல முடியாது, சொல்வது சரியல்ல. ஆனால் எல்லாம் சரி செய்யப்படும்
கலைஞர் இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பார்
கலைஞரும் 100 - கலைஞரும் விகடனும் புத்தகத்துக்கு அணிந்துரை கேட்டனர். ஆனால் இதையெல்லாம் பார்ப்பதற்கு கலைஞர் இல்லையே என்ற கவலை தான் என்னை ஆட்கொண்டிருக்கிறது.
ஆனால் அவருடைய அன்பு மகன் நான் இருக்கிறேன், இதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகத்தில் இதயத்தை இறவலாக கேட்ட தலைச் சிறந்த கவிஞர் நீங்கள் தான்!
காலம் கால்மாக தொடரும் குடும்ப நட்பு!
ஒவ்வொரு காலக்கட்டத்துலையும் கலைஞர் எடுத்த நிலைபாடுகளை இந்த புத்தகத்தில் தெரிந்துகொள்ளல்லாம்!
ஒரு ஆட்சி செயல்படுத்தக்கூடிய நலத்திடங்கள மனப்பூர்வமா ஆதரிச்சு எழுதுங்க - முதலமைச்சர் பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை
சரியானத ஆதரிச்சும், தவற்றை விமர்சிப்பதுதான் நடுநிலை பத்திரிகையின் தர்மம்
இறுதியாக முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் ஏ ஐ காணொளி ஒளிபரப்பப்பட்டது!