“நம்ம தமிழ் மொழிலயும் wordle மாதிரி ஒரு கேம் இருந்தா மொழிக்கான ஆசையும் ஆர்வமும் இளைஞர்கள் கிட்டப் பெரிய அளவில் உண்டாகும். ஆங்கிலத்தில் இருக்கிற wordle அளவுக்கு தமிழ்லயும் நாம ஒரு கேம் உருவாக்கணும்... அது விளையாட ஈஸியா இருக்கணும்” என்று விகடன் குழும மேலாண் இயக்குநர் ஸ்ரீனிவாசன் அவர்கள் கொளுத்திப் போட்ட ஒரு சின்ன தீப்பொறி தான், கொஞ்சம் கொஞ்சமா சூடுபிடித்து தீபமா ஒளிவீசுது...
விளையாட ஈஸியா இருக்கணும்னு சொன்னார்... ஆனா அப்படி ஒரு கேமை உருவாக்கறது அவ்வளவு ஈஸியா இல்லை. ஏன்னா, ஆங்கிலத்தில் மொத்தமே வெறும் 26 எழுத்துகள் தான். தமிழ்ல அப்படி இல்லை... 247 எழுத்துகள். இத்தனை எழுத்துக்களில் வார்த்தையை கண்டுபிடிக்கறது அவ்வளவு ஈஸி இல்லை என்பது ஆரம்பத்திலேயே புரிஞ்சுடுச்சு.
சொல்லியடி
இந்த கேமில் மெயின் ரோல் பண்றதே Elimination method தான். ‘Wordle’-ல 26 எழுத்துகள் என்பது பெரிய பிளஸ்! முக்கிய எழுத்துகள் சிலதும், ஒருசில vowels-ம் இல்லைன்னு ஆகிட்டாலே, மிச்சம் இருக்கிற சொச்ச எழுத்துகளில் வார்த்தையை கண்டுபிடிக்கறது ஈஸி...
தமிழ்லயும் அதுபோல elimination method இருக்கணும். கூட்டம் கூட்டமா எழுத்துகள் எலிமினேட் ஆகணும்... அப்பதான் ஒருசில எழுத்துகள் மட்டும் மிச்சம் தங்கி அதை வெச்சு வார்த்தையை கண்டுபிடிக்கறது சுலபம் ஆகிடும்னு யோசிச்சோம்...
அதுல தோணின ஐடியா தான் “சொல்லியடி!”. மெய் எழுத்துகளை கீபோர்டிலும், உயிர் எழுத்துக்களை க்ளூவாகவும் கொடுத்துட்டா, உயிர் மெய் எழுத்தை விளையாடுறவங்களே உருவாக்கிக்கட்டும்னு யோசிச்சோம்.
Wordle
தொழில்நுட்பக் குழு அடுத்து வேலையில் இறங்கி, இதை ஒரு பக்கா கேமாக நம் கையில் கொடுத்தது.
கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தையில் உயிர் எழுத்துகள் இந்த இந்த வரிசையில் தான் இருக்கும்னு கொடுக்கிற க்ளூ பெரிய அளவில் அந்த வார்த்தையை கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணுச்சு...
நிபுணர் டீம் ஒன்று, இதில் பல கோணங்களில் ‘ட்ரயல் ரவுண்டு’ விளையாடி பார்த்தது. எப்படி உயிர் எழுத்துகளை க்ளூவாக கொடுத்தாலும் அதற்கு வார்த்தை கண்டுபிடிக்க முடிகிறதா, அதே மாதிரியான வார்த்தைகள் எத்தனை வரை யோசிக்க முடிகிறது என பல டெஸ்டுகளை நடத்தி இந்த கேமை பாஸ் ஆக்கியது.
அடுத்து, “பாஸ்”கிட்ட பாஸ் வாங்கணுமே... விளையாட ஆரம்பித்தார்.
ஆட்டம் ஆரம்பிச்சது - எங்களுக்கும்... ரிசல்ட் எப்படி வருமோ... ஓகே சொல்வாரா இல்லை “கேம் ஓவர்”னு சொல்லிடுவாரா என்ற படபடப்பில் இதில் உழைத்த அத்தனை டீமும் ஆடிக்கொண்டிருந்தது.
“ஈஸியா இருக்கு! சொல்லியடிச்சாச்சு!!” என்றார். இந்த கேமுக்கு டைட்டில் கிடைச்சுடுச்சு, வெச்சுட்டோம்!
கேம் - Over to தமிழ் நெஞ்சங்கள்!
சொல்லியடிங்க... வெச்சு விளையா...டுங்க!