chennai Tourist place  twitter
தமிழ்நாடு

Chennai Hangout Spots: சென்னையில் உங்க வீக் எண்டை கழிக்க சில இடங்கள்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்துப் பார்ப்போம்.

Priyadharshini R

கடற்கரை :

உலகின் இரண்டாவது மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகச் சென்னையின் மெரினா கடற்கரை திகழ்கிறது. நீண்ட மற்றும் பரந்த கடற்கரையாகவும் சென்னையின் ஒரு அடையாளமாகவும் விளக்குகிறது. சென்னையில் இருக்கும் மக்களுக்கு ஒரு எளிமையான சுற்றுலாத் தலமாக மெரினா கடற்கரை உள்ளது.

marina beach

கோட்டை செயின்ட் ஜார்ஜ்

சென்னையின் இருப்புக்கு முக்கியமான மற்றொரு முக்கிய அடையாளமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளது. இது தெற்கில் முதல் பிரிட்டிஷ் அதிகார மையமாக இருந்தது, சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழக அரசின் தலைமை செயலகமாக செயல்பட்டு வருகிறது.

கோட்டை செயின்ட் ஜார்ஜ்

கிண்டி பார்க்

நாட்டின் எட்டாவது சிறிய தேசிய பூங்காவாகக் கூறப்படும் கிண்டி பூங்கா 2.70 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் 130 க்கும் மேற்பட்ட பறவைகள், குள்ளநரி உள்ளிட்ட 14 வகையான பாலூட்டிகள் காணப்படுகின்றன

Guindy National Park

முதலை வங்கி

வனவிலங்கு ஈர்ப்புகளில் ஒன்றாகக் கருதப்படுபவை முதலை இனம். சென்னையின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று தான் இந்த முதலை வங்கி. இதுவரை 5, 000 க்கும் மேற்பட்ட முதலைகள் இங்குக் காணப்படுகிறது. ஆலிவ் ரிட்லி ஆமைகளும் இங்குப் பராமரிக்கப்படுகிறது.

crocodile park

வண்டலூர் உயிரியல் பூங்கா

இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகக் கருதப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா, 600 ஹெக்டேருக்கு மேல் பரவியுள்ளது. 1, 500 க்கும் மேற்பட்ட காட்டு இனங்கள் உள்ளன, இதில் சிங்கம், புலி உள்ளிட்ட 46 பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன மற்றும் பூச்சிகள் உள்ளன.

Vandalur zoo

பழவேற்காடு

தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பழவேற்காடு இரு விஷயங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. அவை பழவேற்காடு ஏரி மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவையாகும்.

Pulicat

மகாபலிபுரம்

'மாமல்லபுரம்' நகரம் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிற்பக்கலை சார்ந்த வரலாற்று சுற்றுலாத்தலமாக உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்த நகரம் சர்வதேச 'யுனெஸ்கோ' அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

Mahabalipuram

கோவளம் கடற்கரை

சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர் தெற்கில், கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் கடற்கரை அமைந்துள்ளது. கோவளம் கடற்கரையிலிருந்து ஒரு நடுக்கடல் பயணம். கோவளம் கடற்கரை கிராமம் மீன்பிடி தொழிலுக்குப் பிரபலமானது. இதனால் இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, இது இந்தியாவின் முதல் நீர் சறுக்கு (surf ) இடமாகும். இங்கு நீர் சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகள் உள்ளன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?