தேங்காய் மூலம் நிலத்தடி நீரோட்டத்தை எப்படி கணிக்கிறார்கள்?அறிவியலாளர்கள் சொல்வதென்ன? Twitter
தமிழ்நாடு

தேங்காய் மூலம் நிலத்தடி நீரோட்டத்தை எப்படி கணிக்கிறார்கள்?அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

விவசாயத்தை மட்டுமே நம்பிருக்கும் விவசாயிகள் வயல்களில் தண்ணீர் இருப்பதற்கான இடத்தை கண்டறிய புவியியலாளர்களை அழைக்க விரும்பமாட்டார்கள், இன்னும் சொல்ல போனால் பணம் கொடுக்க விரும்பமாட்டார்கள்.

Priyadharshini R

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்தாலும், நிலாவிலேயே தண்ணீர் இருப்பது குறித்து கண்டுபிடித்தாலும் இன்றும் கிராமப்புறங்களில் கையில் தேங்காயையோ, தண்ணீர் குவளையை வைத்து நிலத்துக்கு அடியில் தண்ணீரைத் தேடும் பழக்கத்தை தான் பின்பற்றி வருகின்றனர்.

விவசாயத்தை மட்டுமே நம்பிருக்கும் விவசாயிகள் வயல்களில் தண்ணீர் இருப்பதற்கான இடத்தை கண்டறிய புவியியலாளர்களை அழைக்க விரும்பமாட்டார்கள், இன்னும் சொல்ல போனால் பணம் கொடுக்க விரும்பமாட்டார்கள்.

இதனால், பல விவசாயிகள், தங்கள் வயல்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க, கள ஆய்வாளர்களை அல்லது நீரோட்டம் பார்ப்பவர்களை அழைத்து வருகின்றனர். வயலில் நீர் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் இடத்தில் குழி தோண்டுகிறார்கள்.

அப்படி பார்க்கப்படும் இடத்தில் தேங்காயையோ, ‘Y’ வடிவ வேப்பங் குச்சி, தண்ணீர் நிரம்பிய இரு பாத்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தி தண்ணீர் இருக்கும் இடத்தை ஆராய்கிறார்கள்.

தேங்காயை உள்ளங்கையில் வைத்துகொண்டு நடக்கிறார்கள்.தேங்காய் நிமிர்ந்து நிற்கும் இடத்தில் நிலத்துக்கு அடியில் நீரோட்டம் இருப்பதாக நம்பப்படுகிறது.

இல்லையெனில், Y-வடிவ வேப்பங்குச்சியுடன் நடக்கிறார்கள். நீரோட்டம் இருக்கும் இடத்தில், அந்தக் குச்சி நேராக எழுந்து நிற்குமாம்.

இதேபோல ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துச் சோதிக்கும் முறையில், அதிலிருக்கும் தண்ணீர் எங்கு சாய்கிறதோ அங்கு கிணறு தோண்டலாம் என்கின்றனர்.

வேப்ப மரங்கள் செழுமையாக வளர்ந்திருந்தால், அவற்றின் கிளைகளும், இலைகளும் ஒரு பக்கமாக வளைந்திருக்கும் பட்சத்தில், அதன் அருகில் எங்கோ தண்ணீர் வாய்க்கால் இருப்பதற்கான அறிகுறி என்றும் நம்புகின்றனர்.

இப்படி ஒருபுறம் நடக்க அறிவியல் முறைகள் மூலம் மட்டுமே நிலத்தடியின் நீரோட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நிலத்தடி நீரின் தடயத்தைக் கண்டறிய உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறைகளில் மிந்தடைக் கணக்கெடுப்பும் (electrical resistivity survey) ஒன்று என்கின்றனர். இது ஒரு விவாதமாகவே இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?