வழக்குரைஞர்கள் நீதிபதிகளாக பணியமர்த்தப்பட இந்திய அரசு பரிந்துரைப்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் சமீபத்தில் லெக்மன சந்திர விக்டோரியா கெளரி என்கிற பெண் வழக்குரைஞரை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக பணியமர்த்தப்பட இந்திய அரசு பரிந்துரைத்ததை எதிர்த்து, சென்னையில் உள்ள பல வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
வழக்குரைஞர் விக்டோரியா கௌரிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் உள்ள தொடர்பை வழக்குரைஞர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதோடு இதே விக்டோரியா கெளரி, இந்தியாவில் வாழும் மைனாரிட்டி சமூகத்தினர் குறித்து கடந்த காலங்களில் பேசியவற்றை உச்ச நீதிமன்றத்திலும் குறிப்பிட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒருவர் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டால் அது நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள பல வழக்குரைஞர்கள் ஒன்றாக சேர்ந்து இந்திய குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கும் மேலே குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம் ஒரு கடிதமாக எழுதி அனுப்பி உள்ளனர்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். வழக்குரைஞர்களைக் கடந்து பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் விக்டோரியா கௌரியின் நியமனத்திற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
ஒரு யூடியூப் வலைதள சேனலுக்கு கொடுத்த பேட்டியில் “ தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அதீத ஆபத்தா? ஜிகாதா அல்லது கிறிஸ்தவ மிஷினரிகளா” என்கிற தலைப்பில் பேட்டி கொடுத்திருந்தார்.
இஸ்லாத் ஒரு பச்சை தீவிரவாதம் என்றால், கிறிஸ்தவம் ஒரு வெள்ளை தீவிரவாதம். இஸ்லாமியர்களை விட கிறிஸ்தவ குழுக்கள் அபாயகரமானவர்கள். லவ் ஜிகாத்தை பொருத்தவரை இருவருமே சம அளவில் அபாயகரமானவர்கள் என்று பேசி இருந்ததாக ஃப்ரீ பிரஸ் ஜர்னல் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதேபோல கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆர் எஸ் எஸ் அமைப்போடு தொடர்புடைய பிரசுரம் ஒன்றில்“ அதிக அளவில் ஞானஸ்தானம் செய்யப்படுவது சமூக அமைதியை அழிக்கிறது” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார்.
வழக்குரைஞராக பணியாற்றி வரும் இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும், நீங்களும் அக்கட்சியில் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க பங்களிக்கலாம் என்றும், அவர் பெயரில் உள்ள (ஆனால் சரிபார்க்கப்படாத) ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டிருக்கிறது. அதே பயோவில் பாஜகவின் மகிலா மோர்ச்சா பிரிவின் தேசிய பொதுச் செயலாளர் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுள், கே எம் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற கொலிஜியம் விக்டோரியா கௌரி அவர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பணியமர்த்தப்பட கடந்த 2023 ஜனவரி 17ஆம் தேதி பரிந்துரைத்தது
இந்த விவகாரத்தை வரும் வெள்ளிக்கிழமை பட்டியலிட இந்தியாவின் தலைமை நீதிபதியான டி ஓய் சந்திர சூட் கடந்த திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust