Why You Should Not Use Ear Buds To Clean Your Earwax Twitter
தமிழ்நாடு

Earbuds: இயர்பட்ஸ் அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கானது!

உங்கள் காதுகளின் வெளிப்புற பகுதியை மட்டும் சுத்தம் செய்ய பட்ஸை பயன்படுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கின்றனர். மேலும் காதின் உட்புறத்திற்கு பட்ஸ் பயன்படுத்த கூடாது என்றும் எச்சரிக்கின்றனர். காதுகளுக்குள் உருவாகும் மெழுகு காதின் பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் கூறுகின்றனர்.

Priyadharshini R

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய இயர்பட்ஸ் பயன்படுத்துவோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை பயன்படுத்துவர். சிலரோ தினமும் ஒரு முறையாவது இந்த பட்ஸை பயன்படுத்துவார்கள்.

ஆனால் காதில் இயர்பட்களை பயன்படுத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உங்கள் காதுகளின் வெளிப்புற பகுதியை சுத்தம் செய்ய மட்டும் பட்ஸை பயன்படுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கின்றனர். மேலும் காதின் உட்புறத்திற்கு பட்ஸ் பயன்படுத்த கூடாது என்றும் எச்சரிக்கின்றனர்.

காதுகளுக்குள் உருவாகும் மெழுகு காதின் பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் இது தூசி, நுண்ணுயிரிகளை காதுக்குள் செல்ல விடாமல் தடுக்கும் என்றும் கூறுகின்றனர்.

இந்த பதிவில் காதுக்கு ஏன் பட்ஸ் பயன்படுத்த கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் காதுகளின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் உங்கள் காதுகளின் உள் பகுதியை சுத்தம் செய்ய அவற்றைப் பயன்படுத்தும்போது, ​​அது காதுகளுக்குள் உருவாகும் மெழுகு ஆழமாக தள்ளுகிறது. இதனால் காதில் அடைப்பு ஏற்படும். இது காது வலி, காது கேளாமை போன்ற பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.

உங்கள் காதுகளை சுத்தம் செய்வதற்கு பல வழிமுறை உள்ளது. பொதுவாக, நீங்கள் குளிக்கும்போது காதுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு நுழைந்து தேங்கிய காது மெழுகுகளை தளர்த்தும் போது காதுகள் சுத்தம் செய்யப்படும்.

தளர்ந்த மெழுகு தானே வெளியே வரும். மெல்லுதல், கொட்டாவி விடுதல் மற்றும் பேசுதல் போன்ற உங்கள் தாடை அசைவுகளாலும் மெழுகு வெளியே தள்ளப்படுகிறது.

இயர்பட்களை தவறாகப் பயன்படுத்துவதால், காதில் உள்ள மெழுகு இறுக்கமாக மாறி அடைப்பு ஏற்படலாம். இதனால் தலைச்சுற்றல், அரிப்பு, காது கேளாமை மற்றும் காதுகளில் வலி ஏற்படலாம்.

உங்களது காதில் இயர்பட்களை பயன்படுத்துவதால் அது பாக்டீரியாவை உள்ளே செல்ல வழி செய்கிறது. இதனால் உங்களுக்கு வலிமிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.

காது அடைப்பு, காது கேளாமை, காது வலி அல்லது காது பகுதியில் அசௌகரியம் போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?