ஜூலியன் அசாஞ்சே - ஸ்டெல்லா மோரிஸ்

 

NewsSense

தமிழ்நாடு

Tamil News Today: இங்கிலாந்து சிறையில் நடைபெற்ற ஜூலியன் அசாஞ்சே - ஸ்டெல்லா மோரிஸ் திருமணம்

இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்.

NewsSense Editorial Team

இங்கிலாந்து சிறையில் நடைபெற்ற ஜூலியன் அசாஞ்சே - ஸ்டெல்லா மோரிஸ் திருமணம்!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தன் நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறைச்சாலையில் நேற்று திருமணம் செய்துகொண்டார். மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் 2015 -ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இருவரும் 2 குழந்தைகளை பெற்றப் பின் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் நேற்று நடைபெற்றது. ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 2019-ல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் புதிய அணை கட்டுவதே தீர்வு: - உச்ச நீதி மன்றத்தில் வாதம்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான பிரச்னைக்கு புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வாதிட்டிருக்கிறது. அணை பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் தொடங்கியது. அப்போது, கேரள அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா தன் தரப்பில் சில வாதங்களை முன்வைத்தார். அந்த வாதத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை. அணையில் அதிக அளவிலான நீர் தேக்கி வைக்கப்படுவதாகவும், இந்த விவகாரம் நீர் பங்கீடு தொடர்புடையதல்ல. அணை பாதுகாப்பு தொடர்புடையது என வாதிட்டார். மேலும், தமிழகம், கேரளாவைச் சேர்ந்த தொழில்நுட்ப உறுப்பினர்களைக் கொண்டு அணையின் கண்காணிப்புக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தன் வாதத்தை முன்வைத்தார். புதிய அணை கட்டுவதே இதற்கு தீர்வு என்பது கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார். வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ரிட் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளிவைத்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக 24-ம் தேதி (இன்று) மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் செல்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதன் முதலாக செல்லும் வெளிநாட்டு பயணம் இது. துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் பங்கேற்கவுள்ள அவர், அங்கு தமிழ்நாடு அரங்கை 25-ம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார். இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன. தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்தப் பயணம் அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு நடைபெறுகிறது. துபாயில் உள்ள முன்னணி வணிக, தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் துபாயிலுள்ள புலம்பெயர் தமிழர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்; ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலை வகித்த இந்தியா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல். நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் தான் கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஆதரிக்குமாறு ஐ.நா உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் வைத்தது. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. உக்ரைன் மீதான தாக்குதலை பற்றிக் குறிப்பிடாமல் மறைத்து தீர்மானம் உருவாகியது ரஷ்யா. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், குறைந்தபட்சம் ஒன்பது உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. ஆனால் 13 கவுன்சில் உறுப்பினர்கள் வாக்களிக்காமல், ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான சீனாவிடமிருந்து மட்டுமே ஆதரவு கிடைத்தது. எனவே ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

ஐ.சி.சி தரவரிசைப் பட்டியல் ஜடேஜா முதலிடம்:

ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில், 3 இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரோஹித் சர்மா 7-வது இடத்திலும், விராட் கோலி 9-வது இடத்திலும் ரிஷப் பாண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 4-வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்ப்ரிட் பும்ரா 6-வது இடத்தில் உள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 10 வது இடத்தில் உள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?