Anand Mahindra
Anand Mahindra Twitter
Viral Corner

நகரும் டைனிங் டேபிளுக்கு பெட்ரோல் - ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ வைரல்

Keerthanaa R

நான்கு நண்பர்கள் சேர்ந்து நகரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டே பயணிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. காரணம், அதை பகிர்ந்துள்ளது ஆனந்த் மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். மிக வித்தியாசமான, சிந்திக்க வைக்கக்கூடிய விஷயங்கள் இவரது கண்ணில் பட்டால் அதை உடனே பகிர்ந்து பாராட்டவும் செய்வார்.

மேலும், இவர் பகிரும் வீடியோக்கள், புகைப்படங்களுக்கு வைக்கும் தலைப்பில் இவரது சொல்லாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அப்படி இவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், நான்கு பேர் ஒரு டைனிங் டேபிளில் அமர்ந்து, சாப்பிடுகிறார்கள்.

அதில் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? அந்த மேஜை நகர்கிறது. அது தான் அதிசயம். அந்த மேஜையுடன் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, அமர்ந்துள்ள நால்வரில் ஒருவர் அதை இயக்குகிறார். இந்த நகரும் மேஜை நேராக ஒரு பெட்ரோல் ஸ்டேஷனுக்குள் செல்கிறது. எரிவாயு நிரப்பும் சமயத்தில், நால்வரும் casual ஆக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேஜையின் மேல், ஒரு நட்சத்திர ஹோட்டலில் அலங்கரித்திருப்பது போல தண்ணீர் குடவை, பிளேட்டுகள், டம்ப்ளர்கள், இவர்கள் அருந்த பானம், Flower vase என செட் செய்யப்பட்டுள்ளது.

இவற்றுக்கு இடையில் அந்த மேஜையை செலுத்த ஹேண்டில் பாரும் இருக்கிறது. எரிவாயு நிறப்பிய பின், நமது வண்டியை ஓட்டி செல்வது போல இவர்களும் நகர்ந்து செல்கின்றனர்.

இதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா தன் டிவிட்டர் பக்கத்தில் 'ஈ-மொபிலிட்டி' (e-mobility, where 'e' stands for eating) என்ற தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார்.


தற்போது அந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?