ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா Twitter
Viral Corner

Anand Mahindra : அதை சொன்னால் என் வேலை போய்விடும் - ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ட்வீட்

Keerthanaa R

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நெட்டிசங்களுக்கு இணையாக ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பார். இந்தியாவின் மிகப் பெரிய பிஸினஸ் டைக்கூன் என்றழைக்கப்படும் மஹிந்திரா, அவர் எடுத்து பகிரும் வீடியோக்கள், புகைப்படங்கள், அதற்கு அவர் தரும் கேப்ஷன்கள் படிப்பவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

சிறு சிறு விஷயத்திலும் அவர் கொடுக்கும் கண்ணோட்டங்கள், பல நேரங்களில் நம்மை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. அதுபோலவே, நேற்று நடந்த ஒரு உரையாடலிலும், ஓர் ட்விட்டர் பயனர் கேட்ட கேள்விக்கு மஹிந்திரா அளித்த பதில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mahindra's reply

ஒரு நகைச்சுவையான புகைப்படத்திற்கு, மஹிந்திரா மோட்டிவேஷனல் கேப்ஷன் கொடுக்க, அதற்கு ஒரு பயனர், பிரபல ஆங்கில பழமொழியில் சொல்லாடலோடு பதிலளித்திருந்தார். அதை பாராட்டிய மஹிந்திரவிடம் மீண்டும் அந்த பயனர், மஹிந்திராவின் அடுத்த ஸ்கார்பியோ மாடல் எப்போது வருமெனக் கேட்டதற்கு, ஆனந்த் "ஷ்ஷ்... அதைச் சொன்னால் என் வேலை போய்விடும்! உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

இந்த நகைச்சுவை மிக்க சாமர்த்திய பதில் பயனர்களை உற்சாகப்படுத்த, வரத் தொடங்கியது லைக்குகள் மழை. மஹிந்திரா தன்னை வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என சொன்னதற்கு ஒருவர் "கவலைகொள்ள வேண்டாம் சார்.

நான் என் இரு கைகளையும் கூப்பி, பணிவன்புடன் உங்களை வேலையை விட்டு அனுப்பவேண்டாம் என கோருகிறேன். அவர் மிகவும் நல்லவர். அவர் உங்களை அனுப்பமாட்டார்" என்றார்.

மற்றுமொருவர்," அருமையான பதில் சார். கவலை வேண்டாம், உங்களுக்கு எங்கள் இதயங்களில் இடமிருக்கிறது" என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?