Bear (representational) Pexels
Viral Corner

கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து பயந்த கரடி - வைரல் வீடியோ

நம் வீட்டு குழந்தைகள் அல்லது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை கண்ணாடியை பார்க்க வைத்து அவர்களின் ரியாக்ஷன்களை படம் பிடித்து இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் பிம்பத்தை பார்த்து வியக்கும் தருணங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.

Keerthanaa R

மனிதர்களுக்கு கண்ணாடியில் தங்களை பார்த்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். நம் அழகை ரசித்துக்கொள்ள பார்க்கிறோம் என்பதையும் தாண்டி சும்மா ஒரு கண்ணாடி முன் நிற்போம். சிலர் கண்ணாடியை பார்த்து அவர்களுடன் அவர்களே பேசிக்கொள்வார்கள். இதன் மூலம் நம் Self Confidence பெருகும் என்ற கூற்றுகள் உண்டு.


முதன் முதலில் நாம் கண்ணாடியை பார்த்தப்போது நம் ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்? குழந்தையாக இருக்கும்போது தான் நமக்கு கண்ணாடியை காண்பித்திருப்பார்கள். கொஞ்சம் பயந்து போயிருப்போம். ஆனால் போக போக நமக்கு பழகியிருக்கும்.

கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து பயந்த கரடி

நம் வீட்டு குழந்தைகள் அல்லது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை கண்ணாடியை பார்க்க வைத்து அவர்களின் ரியாக்ஷன்களை படம் பிடித்து இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் பிம்பத்தை பார்த்து வியக்கும் தருணங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.
இப்படி வன விலங்குகளை கண்ணாடியைப் பார்க்க வைத்தால்?

காட்டில், கரடி ஒன்று வரும் இடத்தில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாகக் கரடி ஒன்று வரவே கண்ணாடியை கவனிக்கிறது. அது என்னவென்று தெரியாமல் அருகில் வந்து பார்த்ததும், கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்துவிட்டு பயந்துவிடுகிறது.

ஒருவேளை தனக்கு எதிரில் வேறொரு கரடி இருக்கிறதோ என்று நினைத்து பின்னால் சென்று பார்த்துவிட்டு, அங்கு யாருமில்லாததால் மீண்டும் கண்ணாடியின் அருகில் வருகிறது. மீண்டும் பிம்பத்தை பார்த்த கரடி, கோபத்துடன் அந்த கண்ணாடியை தூக்கிப்போட்டு உடைக்கிறது.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?