Disney Land Pexels
Viral Corner

டிஸ்னி லேன்டில் ப்ரபோஸ் செய்த காதலர்; மோதிரத்தை பறித்த ஊழியர் - வைரலாகும் வீடியோ

டிஸ்னி லேன்ட் தீம் பார்க்கில் காதலியிடம் ப்ரபோஸ் செய்ய முயன்ற நபரை ஊழியர் ஒருவர் இடைமறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ, நெட்டிசன்கள் அந்த டிஸ்னி லேன்ட் ஊழியரைச் சரமாரியாகத் திட்டி வருகின்றனர்.

Keerthanaa R

பாரிஸில் உள்ள டிஸ்னி லேன்ட் தீம் பார்க்கில், தன் காதலியிடம் ப்ரபோஸ் செய்ய ஒருவர் தயாரானபோது, அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த நபர் ஒருவர் இடைமறித்து, அவர்களை அங்கிருந்து இறங்குமாறு கூறி, காதலிக்காக வைத்திருந்த மோதிரத்தையும் பறித்தார். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ, நெட்டிசன்கள் அந்த டிஸ்னி லேன்ட் ஊழியரைச் சரமாரியாகத் திட்டி வருகின்றனர்.

Man proposing his girlfriend interrupted

காதலிப்பவர்கள், அவர்கள் பழகும் காலகட்டத்தில், நிகழும் ஒவ்வொரு தருணத்தையும் ஸ்பெஷலாக்க விரும்புவர். அதற்காகப் பார்த்துப் பார்த்து அனைத்து வேலைகளையும் சரிவர செய்யவேண்டும் என்று மிக கவனமாக இருப்பார்கள்.

அப்படியே நாம் செய்தது எல்லாம் சரியாக நடந்தாலும் சில external forces நம் மிக முக்கியமான மொமென்ட்ஸை கெடுப்பதற்காகவே வரும். அப்படித்தான் பாவம் நடந்திருக்கிறது இந்த வெளிநாட்டுக் காதல் ஜோடி ஒன்றுகு.

Disney Land

பாரிஸில், டிஸ்னி லேன்டில் உள்ள ஸ்லீப் கேஸ்டில் முன் தன் காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள ஒப்புதல் பெற தயாரான ஒருவரை அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்திவிட்டார்.


ஒரு காலில் முட்டி போட்டுக்கொண்டு தன் காதலியிடம் அவருக்கு வாங்கிய மோதிரத்தை அவர் எடுத்து ஸ்டைலாக நீட்ட, அவரது காதலியோ இதை பார்த்துத் திகைத்து நின்றார். ஆனால் அவர் அவரது சம்மதத்தைக் கூறும் முன், ஓடி வந்த டிஸ்னி லேன்ட் ஊழியர் அவரிடம் இருந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு, காதலர்கள் இருவரையும் கீழே இறங்குமாறு செய்கை செய்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

தங்களின் இந்த முக்கிய தருணத்தை பத்திரமாக, ஸ்பெஷலாக வைத்திருக்கவேண்டும் என்று, டிஸ்னி லேன்டிடம் முன்னரே முறையான அனுமதி பெற்று தான் அந்த நபர் ப்ரபோஸ் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் இப்படி ஒரு தடங்கல் வருமென்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்த வீடியோவை இணையதளத்தில் பகிர, பலரும் அந்த ஊழியரை கமன்ட் செக்ஷனில் சரமாரியாகத் திட்டி வருகின்றனர். இந்த வீடியோவை 21,000 பேருக்கு மேல் பார்த்திருக்கின்றனர். பார்த்தவர்கள் அனைவரும், அந்த காதல் ஜோடிக்காக தாங்கள் வருந்துவதாகவும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Disney Land

அதில் ஒருவர் "நான் அந்த இடத்திலிருந்திருந்தால் அந்த மோதிரத்தை ஊழியரிடம் இருந்து வாங்கி அவன் முன் மீண்டும் ப்ரபோஸ் செய்திருப்பேன்" என்றார். இன்னொருவர், "ஒருவேளை அவர் சிங்கிள் ஆக இருப்பதனால் பொறாமையில் இப்படிச் செய்திருப்பார்" என்று கூறியிருந்தார்.

ஆனால் இன்னொருபுறம் அந்த நபர் டிஸ்னி லேன்ட் முன் ப்ரபோஸ் செய்ய முயன்றது தவறு, அந்த ஊழியர் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறி வருகிறது. சரியோ தவறோ, அவர்களது இந்த ஸ்பெஷல் மொமென்ட் ruined !

நிச்சயம் அந்த காதலரின் மைண்ட் வாய்ஸ் "எனக்குன்னே வருவீங்களா டா?" என்ற வடிவேல் டைலாக்காகத் தான் இருக்கும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?