Call Recording  Twitter
Viral Corner

Google Play store : மே 11 முதல் கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு தடை - காரணம் என்ன?

இனி தங்கள் ஃபோன்களில் உள்ள ஆண்ட்ராய்டு ஆப்கள் மூலம் பயனர்கள் கால் ரெக்கார்ட் செய்ய முடியாது என்று கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு கொடுத்துள்ளது. மேலும், மே 11 முதல் இச்செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் தடை செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

Keerthanaa R

நாளை முதல் (மே 11) Google Play store-ல் இருக்கும் அனைத்து மூன்றாம் தரப்பு (Third Party) கால் ரெக்கார்டிங் ஆப்களுக்கும் தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது கூகுள். பயனர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்கனவே பயனர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள இந்த செயலிகள், மே 11 முதல் இயங்காது.

மூன்றாம் தரப்பினர் அளிக்கும் இந்த கால் ரெக்கார்டிங்க் சேவைகள், நாம் பேசும் போன் கால்களை பதிவு செய்யும் அதே வேளையில், நம் போனில் உள்ள API தரவுகளை இவை ட்ராக் செய்யும். இதனால் பயனர்களின் ப்ரைவசி கேள்விக்குறியாவதாகவும், பலர் இந்த செயலிகளை தவறான செயல்களுக்காக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில், கூகுள் இந்த நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளது.

Google Play Store

பயனர்களின் அனுமதியை பெற்ற பின்னரே API தரவுகளை ட்ராக் செய்வதாக கூறும் மூன்றாம் தரப்பு ஆப் நிறுவனங்கள், இனி இந்த தடையால், தங்கள் சேவைகளை வாடிக்கையாளர்களுக்குத் தர இயலாது என்று தெரிவிக்கின்றன.

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப்களுக்கு தடா போட்டாலும், சாம்சங், ஷவ்மி போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவன மொபைல் போன்களுக்கு in-built ஆக கால் ரெக்கார்டிங் ஆப்களை முன்னரே வைத்துள்ளது. இந்த பிராண்டு செல் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு தங்கு தடையின்றி செயலிகள் இயங்கும்.

Call Recorder

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?