HIF : "காதலி ஏமாற்றியதால் எனக்கு 25,000 கிடைத்தது" - வைரலாகும் Heartbreak Insurance Fund Canva
Viral Corner

HIF : "காதலி ஏமாற்றியதால் எனக்கு 25,000 கிடைத்தது" - வைரலாகும் Heartbreak Insurance Fund

ஆர்யன் அவர் காதலியுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துள்ளார். அதன்படி, இருவரும் இணைந்து வங்கியில் புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கி அதில், மாதம் 500 ரூபாய் செலுத்தியுள்ளனர்.

Antony Ajay R

காதல் பிரிவினால் ஏற்படும் மன சோர்வுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர் ஒரு ஜோடி. இதற்கு Heatbreak Insurance Fund எனப் பெயர் வைத்திருக்கின்றனர்.

ஒருவரை நேசிக்கத் தொடங்கும் போதே அவரைப் பிரியவும் நாம் தயாரக இருக்க வேண்டும் என்பது பலரும் கொடுக்கும் அட்வைஸ்.

ஆனால் நம் மனம் எப்போதும் அட்வைஸ்களைக் கேட்டுக்கொள்வது கிடையாது.

இதனால் பிரிவு என்பது வற்றாத சோகத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

நண்பர்களுடன் நேரம் செலவழித்தல், புதிய விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நாம் அந்த சோகத்தை நீக்கிக்கொள்ள முயல்வோம்.

என்ன ஆனாலும் பிரிவு தரும் மனச் சோர்வுக்கு தீர்வு இல்லை. ஆனால் சில மருந்துகள் இருக்கின்றது.

பணத்தை அப்படி ஒரு மருந்தாக பயன்படுத்த முயன்றுள்ளனர் ஒரு ஜோடி. அப்படி அவர்கள் செய்தது என்ன?

பிரதீக் ஆர்யன் என்பவர் அவரது ட்விட்டர் கணக்கில் இது குறித்து பகிர்ந்துள்ளார்.

ஆர்யன் அவர் காதலியுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துள்ளார். அதன்படி, இருவரும் இணைந்து வங்கியில் புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

மாதம் 500 ரூபாய் அதில் செலுத்தியுள்ளனர். இறுதியில் இவர்கள் பிரிந்தால் யார் ஏமாற்றுகிறாரோ அவர் பணத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆர்யனின் காதலி விட்டுச்சென்றதால் அவருக்கு 25,000 ரூபாய் கிடைத்ததாக அந்த பதிவில் கூறியுள்ளார்.

இது குறித்து கமன்டில் பலரும் விவாதம் செய்து வருகின்றனர். காதல் விஷயத்தில் இப்படி செய்வது சரியா? தவறா? எனக் கூற முடியாது. ஆனால் பணம் நமக்கு சந்தோஷத்தை கொண்டுவரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அது குறித்து தெரிந்துகொள்ள,

America: பணம் மனிதனுக்கு மகிழ்ச்சி தருமா? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?