ராஜினாமா கடிதங்கள் என்றாக் ஒரு இடத்திலிருந்து பிரிந்து செல்லும் அல்லது ஒரு பொறுப்பிலிருந்து விலகும் துன்பமான நிகழ்வு என்று எண்ணுகிறோம். ஆனால் அப்படியல்ல, ஒரு மோசமன வேலையிலிருந்து, நாம் விரும்பி ஏற்காத பொறுப்பிலிருந்து, நம்மை நிம்மதி இழக்கவைக்கும் நிறுவனத்திடம் இருந்து விலகுவதும் ஒரு மகிழ்ச்சியான செயலே.
இந்த நேர்மையான விஷயத்தை யாரும் மிக நேர்மையாக செய்தவர்கள் மிகக் குறைவே. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்பதைப் போல லட்சம் பொய் சொல்லி ராஜினாமா செய்பவர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியில் வரேன்டா ஐயாச்சாமி என சச்சின் விஜய் போல நச் ராஜினாமாக்கள் செய்தவர்கள் இணையத்தைக் கலக்குகின்றனர். அப்படிப்பட்ட 6 ராஜினாமா கடிதங்களைத் தான் இங்குக் காணப்போகிறோம்.
இவர் அவரது ராஜினாமாவுக்கான காரணத்தை விரிவான சுழற்சியாக விவரித்திருக்கிறார். அதாவது இந்த நிறுவனம் தரும் சம்பளம் பத்தவில்லை என்பதில் தொடங்கி இதனால் அவரது தலைவர் குண்டாவது வரை எழுதியிருக்கிறார்.
இந்த ராஜினாமாவுக்கு Butterfly Effect Resignation எனப் பெயர் வைத்துக் கொள்ளலாம்.
ஒரு தீர்கமான முடிவு எடுக்கப்பட்டிருப்பது இந்த ராஜினாமா கடிதத்தின் மூலம் தெரிகிறது.
எனினும் அலுவலகத்தின் கிறிஸ்துமஸ் பார்டிக்கு வர விரும்புவதாக கூறியிருப்பது தான் அதில் ஹைலைட்!
இந்த கடிதத்தில் 8 மணி நேரத்துக்கு பதிலாக 10 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்கும் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நபர், அவரது தினசரி சுழற்சியில் பெரும்பகுதி அலுவலகத்தில் தீர்ந்து போவதனால் எப்படி அவரது அன்றாடத்தில் மனைவி, குழந்தைகளுடன் செலவிட நேரம் இல்லாமல் இருக்கிறார் என்பதை எழுதியிருக்கிறார்.
அதாவது நம் வாழ்க்கைக்கு தான் வேலையே தவிர, வேலைக்காக வாழ்க்கை இல்லை என்பது தான் அவர் கூறவரும் கருத்தாம்.
மூன்றெழுத்தில் ராஜினாமாவை சுருக்கமாக முடித்திருக்கிறார் இந்த நபர். அப்படி என்ன நடந்திருக்கும்? என்பதை அவர் போட்டிருக்கும் கையொப்பத்திலிருந்து கற்பனை செய்துகொள்ள முடியும்.
நாம் வேலைத் தேடிக் கொண்டிருக்கும் போதெல்லாம் சும்மா இருக்கும் கம்பனிகள், நமக்கு எதாவது ஒரு இடத்தில் வேலை கிடைத்த பிறகு விளம்பரத்தை போட்டுத்தாக்குவார்கள். இப்படி மற்றொரு நிறுவனத்துக்கு மாறப்போகும் நபரின் நேர்மையான கடிதம் தான் இது.
நான் வேறு நிறுவனத்து செல்கிறேன் அது சரியில்லை என்றால் மீண்டும் வருகிறேன் எனச் சொல்லி சென்றிருக்கிறார் அவர்.
இது ஓர் வங்கி பணியிலிருந்து விலகுபவரின் ராஜினாமா கடிதத்தைப் போலத் தெரிகிறது. "போதும் போதும்" எனச் சொல்லி ராஜினாமா செய்யும் அளவு என்னக் கொடுத்திருப்பார்கள்?