Alia-Celesti Twitter
Viral Corner

"நான் ஆலியா பட் இல்லை" - இணையத்தில் வைரலாகும் ஆலியாவின் Doppelganger

Keerthanaa R

பிரஇந்த உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்கள் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். சில சமயங்களில் மீதி ஆறு பேர் எங்கே, என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று நாம் யோசிப்போம்.

மற்ற ஆறுவரில் ஒருவரையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கும்.


இது இப்படி இருக்க, பலர் தங்களுக்கு பிடித்த சினிமா, விளையாட்டு நட்சத்திரங்களை போல தோற்றமளிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு அவர்களை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் சிலர், நிஜத்திலேயே பார்க்க இந்த பிரபலங்களை போல இருப்பார்கள்.

உருவ ஒற்றுமை உள்ளவர்களை Doppleganger என்று குறிப்பிடுவோம். இவர்கள் இரட்டையர்கள் கணக்கில் வரமாட்டார்கள். பார்க்க தோற்றத்தில் ஒன்றுபோல மட்டும் இருப்பர்கள். ரத்த சம்பந்தம் இருக்காது.

அவர்களை பார்த்து நாம் குழம்பியதும் உண்டு. 70s 80s கமல்ஹாசன், எம் ஜி ஆர், நகைச்சுவை நடிகர் வடிவேலு, ஷா ருக் கான், முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி என, பலரது Doppelganger களை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் தற்போது இன்டெர்நெட்டின் சென்சேஷன், பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் Doppelganger தான்.

Celesti Bairagey மும்பையை சேர்ந்தவர். இந்த பெண்ணின் முகம், கன்னத்தில் விழும் குழி, உருவம் என அனைத்தும் சட்டென்று பார்ப்பவர்களை ஆலியா பட் என்று நினைக்க வைக்கிறது. உற்று பார்த்தால் இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

Celesti Bairageyக்கும் பாலிவுட்டில் பெரிய நடிகை ஆக வேண்டும் என்பது தான் ஆசை. அதற்கான முயற்சிகளை செய்து வருவதாகவும், என்ன தான் பார்ப்பதற்கு தான் ஆலியா பட் போல இருந்தாலும், சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி பெயரை சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இவரை பற்றிய பதிவை பிரபல இன்ஸ்டாகிராம் பக்கமான Humans of Bombay பகிர்ந்திருந்தனர்.


தன்னை ஆலியா பட்டின் உருவ ஒற்றுமை என்று சொல்லாமல், Celesti ஆக பார்க்க வேண்டும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?