Japan woman Twitter
Viral Corner

ஜப்பான் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட் நடிகைகளின் பாடல்களை recreate செய்யும் பெண்| Video

Priyadharshini R

ஜப்பானியப் பெண் ஒருவர் இந்திய முறைப்படி சேலை அணிந்து ஐஸ்வர்யாவின் வசனத்தைப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?” இந்த பாடல் வரிகள் போல இந்தியப் பெண்கள் புடவை அணிந்திருக்கும் அழகே தனிதான்.

தற்போது புடவை உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது, பல வெளிநாட்டுப் பெண்கள் புடவை அணிந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான மாயோ ஜப்பானில் பகிர்ந்த பதிவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த ஹம் தில் தே சுகே சனம் படத்தின் பிரபலமான உரையாடலையும் தீபிகா படுகோன் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் வசனத்தையும் பேசியுள்ளார்.

அலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குபாய் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

இந்த வசனங்களைப் பேசும் போது புடவை அணிந்து அழகாக நளினமாகப் பேசியுள்ளார். தனது இன்ஸ்டா பதிவுகளில் பாலிவுட் பாடல்களுக்கு நடன வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மேலும் தான் ஹிந்தி மொழியில் பட்டம் பெற்றுள்ளதாக அவரின் profile -லில் குறிப்பிட்டுள்ளார்.

தனது வீடியோ ஒன்றில் சேலை ஒரு பெண்ணை அழகாக்குகிறது அதனை ஒப்புக்கொள்கிறீர்களா? எனவும் கேட்டுள்ளார்.

இவரது இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?