Employee (Rep)
Employee (Rep) Twitter
Viral Corner

'வேற கம்பெனிக்கு இன்டர்வியூ போறேன், எனக்கு லீவு தாங்க' - ஓர் அடடா லீவ் லெட்டர்

Priyadharshini R

பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிய பல்வேறு விதிமுறைகள் இருக்கும். அதாவது, வேலைக்குச் சேரும்போது கொடுக்கப்படும் ஆஃபர் லெட்டர் தொடங்கி வேலையை விட்டு நீங்கும் போது கொடுக்கப்படும் ரிலீவிங் லெட்டர் வரை ஒவ்வொரு ஸ்டேஜையும் கடந்து தான் வர வேண்டும்.

சிலர் ஒரே நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கதையெல்லாம் கேட்டிருப்போம். இன்னும் சிலர் தங்களது தகுதிக்கு ஏற்ப, அல்லது சம்பள உயர்வுக்காக வேறொரு நிறுவனத்திற்குச் செல்லும் சூழல் ஏற்படும்.

அப்படி ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்ல ஏதேனும் ஒரு பொய்யை சொல்லி விட்டுச் சென்றுதான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு அப்படியே தலைகீழாக உள்ளது.

இங்கு ஒருவர் தனது மேலதிகாரிக்கு விடுமுறைக் கேட்டு அனுப்பிய மெயில் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதனை சாஹில் என்பவர் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த லீவ் லெட்டரில், வேறொரு நிறுவனத்தில் இண்டெர்வியூக்கு செல்ல இருப்பதால் இன்று விடுமுறை தேவைப்படுகிறது எனக் கேட்டு இதனை அனுமதிக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், அந்த ஊழியரின் நேர்மை பாராட்டுக்குரியதாக இருக்கிறது என்ற பதிவிட்டு வருகிறார்கள்

இன்னொருவர் நல்ல பணிச் சூழல் இருந்த காரணத்தாலேயே அவர் நேர்மையாக உண்மையைக் கூறி விடுப்பு கேட்டிருக்கிறார் என்று தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் ஊழியர் ஒருவர் bye bye சார் என ராஜினாமா கடிதம் எழுந்திருந்தது நெட்டிசன்களிடையே படு வைரலாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?

சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன தெரியுமா?

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!